free website hit counter

சீனாவில் மீண்டும் லாக்டவுண் - சூரிச் விமான நிலையத்தில் தவிக்கும் பயணிகள் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சீனாவின் ஷாங்காய் நகரம் கோவிட் தொற்று காரணமாக மீண்டும் பூட்டப்பட்டுள்ளது. இதனால் சீன பெருநகரத்திற்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் சூரிச் விமான நிலையத்தில் நூற்றுக் கணக்கான சீனபயணிகள் பயணத்தைத் தொடர முடியாமல் தவிக்கின்றார்கள்.

ஷாங்காய் நகரின் அரசாங்கம் நேற்று புதிய பூட்டுதலை அறிவித்தது. இதேவேளை நேற்று மாலை சாவ் பாலோவில் இருந்து சூரிச் ஊடாக ஷாங்காய் செல்லும் நூறு பயணிகள், தங்கள் பயணத்தைத் தொடரமுடியாமல் தவிக்கின்றார்கள்.

சீனப் பெருநகரில், உள்நாட்டுப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதுடன், புடாங் சர்வதேச விமான நிலையமும் இயங்குவது குறித்துத் தெரியாத நிலையில், அனைத்துப் பயணிகளையும் அவர்கள் வந்த இலக்கான சாவ் பாலோவிற்குத் திரும்பச் சொன்ன நிலையில் பயணிகள் தமது பயணத்தைத் தொடர விரும்பினர். அவர்களது பயணம் தொடர்வதற்கான வாய்ப்பு வரும்வரை, அவர்கள் சூரிச் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

அவர்களை பிரத்தியேக தங்குமிடங்களில் சேர்ப்பதாயின், அவர்களுக்கு சுவிற்சர்லாந்து விசா தேவை. ஆனால் அது அவர்களிடம் இல்லை. ஆதலால் அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில், விமான நிலையத்துள்ளயே தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான சோஃபாக்கள், உணவு மற்றும் இணைய இணைப்பு என்பன வழங்கப்பட்டுள்ளதாக சூரிச் விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் பெட்டினா குன்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction