free website hit counter

அரிய மருத்துவ குணங்கள் கொண்ட சீத்தாபழம் !

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியாவில் சீத்தாப்பழம் என அழைக்கப்படும் (Sugar-apple) இப்பழம், இலங்கையில் அன்னமுன்னாப் பழம் என அழைக்கப்படுகிறது.  மேற்கிந்தியத் தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்பழம், ஸ்பானிய வணிகர்களால் ஆசியாவிற்கு எடுத்து வரப்பட்டது.

சீத்தாப்பழத்தில் சர்க்கரை நோய்க்கு எதிரான குணங்கள் இருக்கின்றன. இந்த குறிப்பிட்ட குணம் குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தி, தசைகளுக்கு குளுக்கோஸ் சென்றடையும் வழிகளை மேம்படுத்தும்.

உடலில் குளுக்கோஸ் பயன்படும் செயல்பாட்டை இந்த குணம் தான் கட்டுப்படுத்த உதவி செய்யும். எனவே, சீத்தாப்பழத்தை தினமும் சிறிய அளவுகளில் சாப்பிடும் போது, அது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவி செய்யும்.

உடலுக்குத் தேவையான மிக முக்கியமான தாதுக்களில் மூன்றாவது இடத்தை மக்னீசியம் பிடிக்கும். குறைவான அளவு மக்னீயம் உடலில் இருந்தால், நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் அறிவிக்கின்றன.

இது உடலில் இன்சுலின் உற்பத்தியை அதிகமாக வைத்திருக்கவும், குளுக்கோஸை கட்டுப்படுத்தவும் உதவி செய்யும். எனவே, மக்னீசியம் நிறைந்திருக்கும் சீத்தாப்பழத்தை சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து என்றால் அது தவறு கிடையாது.

மிகவும் அதிகமான இரும்புச்சத்தை கொண்டிருப்பதும் சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய பலன்களில் ஒன்று. இரத்த சோகைக்கு எதிராகப் போராடவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் இந்த சத்து உதவி புரியும். எனினும், சர்க்கரை நோயாளியின் உடலில் அளவுக்கு அதிகமாக இரும்புச்சத்து இருந்தால், அது வேறு சில பிரச்சனைகளை வரவழைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளலாம்.

எனவே, மிதமான அளவிற்கு சீத்தாப்பழத்தை சாப்பிட்டு சர்க்கரையை கட்டுப்படுத்தவும். இரும்புச்சத்து இருந்தால் இதயத்திற்கு பலனளிக்கும் வகையில் இரத்தத்தை உற்பத்தி செய்யலாம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula