சூரியனில் இருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்களும் 20 விநாடிகளும் எடுக்கும் என்பதை நீங்கள் சில நேரம் அறிந்திருக்கலாம்.
வெற்றிடத்தில் ஒளியை விட வேகமாகப் பயணிக்கும் பொருள் அல்லது சக்தி இல்லை என்பதால் சூரியன் திடீரென மறைந்து விட்டாலும் பூமிக்கு அதன் ஈர்ப்பு விசை நின்று போகவும் ஒளி மறைந்து போகவும் இதே 8 நிமிடங்களும் 20 விநாடிகளும் எடுக்கும் என்றால் அதுவும் கோட்பாட்டு அறிவியலில் சாத்தியமே.
சூரியன் திடீரென மறைந்து விட்டால் 8 நிமிடங்கள் 20 விநாடிகளின் பின் திடீரென எமது பூமியும் படிப்படியாக ஏனைய கிரகங்களும் விண்வெளியில் வீசப் படும் என்றும் சூரிய குடும்பம் என்ற ஒன்று இல்லாமல் போய் விடும் என்றும் கூறப்படுகின்றது. பூமி அந்தர வெளியில் வீசப் பட்டால் அதிர்ஷ்ட வசமாக வேறு ஏதேனும் விண் பொருளுடன் அது மோதா விட்டால் இன்னும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு பூமியில் நுண்ணுயிர் வாழ்க்கை இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் சூரியனின் ஈர்ப்பு விசை அற்றுப் போனாலும் அது பூமி மற்றும் அதன் நிலவின் ஈர்ப்பு விசையில் குறிப்பிடத்தக்க ஒரு தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றும் உடனடியாக பூமியில் உள்ள மனிதர்கள் விலங்குகள் மற்றும் ஏனைய பொருட்கள் தூக்கி வீசப்பட மாட்டார்கள் என்றும் கணித்துள்ளனர். மேலும் வானியலாளர்கள் பூமி தான் பயணிக்கும் சுற்றுப் பாதையில் மிகப் பெரிய விண்கல் அல்லது ஏனைய கிரகம் வந்து மோதினால் தான் எமது கதை முடிந்து விடும் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் பூமியில் உணவுச் சங்கிலியில் பெரும் பங்கு வகிக்கும் சூரிய ஒளி அற்றுப் போனால் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்கள் சில ஆண்டுகளுக்குள் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு அழிவைச் சந்திப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது சூரியன் திடீரென மறைந்து விட்டாலும் அதனை நாம் 8 நிமிடம் பார்க்க முடியுமா?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode