free website hit counter

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மிகத் திருத்தமான பதில் சூரியன் ஆகும். ஆம் சூரியனும் பால் வெளி அண்டத்தில் உள்ள கோடானு கோடி நட்சத்திரங்களில் ஒன்று தான்.

பூமியில் இருந்து 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனைத் தவிர்த்துப் பார்த்தால் ஆல்பா செண்டூரி நட்சத்திரத் தொகுதியில் உள்ள ப்ரொக்ஸிமா செண்டூரி தான் பூமிக்கு அருகே உள்ள நட்சத்திரம் ஆகும்.

ஆல்பா செண்டூரி நட்சத்திரத் தொகுதியில், ஆல்பா செண்டூரி A, ஆல்பா செண்டூரி B மற்றும் ப்ராக்ஸிமா செண்டூரி என 3 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பூமிக்கு மிக அருகே இருக்கும் ப்ரொக்ஸிமா சென்டூரி பூமியில் இருந்து 4.22 ஒளிவருடங்கள் தொலைவில் உள்ளது. அதாவது ப்ராக்ஸிமா செண்டூரியில் இருந்து இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒளி 4.22 வருடங்களுக்கு முன்பே புறப்பட்டு விட்டது. ஒளிவருட அளவீட்டின் படி பார்த்தால் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் 8 ஒளி நிமிடங்கள் ஆகும். அதாவது சூரியனில் இருந்து பூமிக்கு ஒளி வந்து சேர 8 நிமிடங்கள் எடுக்கின்றது என்பது இதன் பொருள் ஆகும்.

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 1 வானியல் அலகு (1 AU) ஆகும். இதன் படி பார்த்தால் ப்ராக்ஸிமா செண்டூரி பூமியில் இருந்து 265 000 AU தொலைவில் உள்ளது. ஒப்பீட்டளவில் ப்ராக்ஸிமா செண்டூரி ஏனைய நட்சத்திரங்களை விட சிறிதும், பிரகாசம் குறைந்ததும் ஆகும். அதனால் நம் வெறும் கண்களுக்கு அது பிரகாசமான நட்சத்திரமாகத் தெரிவதில்லை.

இந்த ப்ராக்ஸிமா செண்டூரி நட்சத்திரத்தை சுற்றியும், பூமியைப் போன்ற உயிர் வாழத் தகுதியான கிரகம் (Exoplanet) இருக்க வாய்ப்புள்ளதாம். இங்கும் தண்ணீர் திரவ, வாயு மற்றும் திண்ம நிலைகளில் இருக்க முடியுமாம். ப்ராக்ஸிமா B என்று பெயரிடப் பட்டுள்ள இந்தக் கிரகம் தான், இன்னொரு நட்சத்திரத் தொகுதியில், உயிரினங்கள் இருக்கக் கூடிய பூமிக்கு மிக சமீபமான கிரகமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction