free website hit counter

விரைவில் நிலவில் தரையிறங்கவுள்ள விக்ரம் லேண்டர்! : நிலவு வட்டப் பாதையின் 3 ஆம் அடுக்கில் சந்திரயான்2

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப் பட்ட இந்தியாவின் சந்திராயன் 2 விண்கலம் நிலவு வட்டப் பாதையின் 3 ஆம் அடுக்கில் இணைந்துள்ளது.

மிகவும் தொழிநுட்ப சவால்கள் நிறைந்த இஸ்ரோவின் இந்த செயற்திட்டமானது சந்திரயான் 2 விண்கலம், ஜூலை 22 ஆம் திகதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ஜி எஸ் எல் வி மார்க் 3 ராக்கெட்டு மூலம் விண்ணில் ஏவப் பட்டதன் மூலம் ஆரம்பமானது.

எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு இன்னமும் 11 நாட்கள் உள்ள நிலையில் இதுவே சந்திரயான் 2 விண்கலத்தின் 4 ஆவதும் சவால் நிறைந்த இறுதிக் கட்டமும் ஆகும் என்பதும் முக்கியமானதாகும்.

உலகில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக நிலவை ஆய்வு செய்யும் 4 ஆவது நாடு இந்தியா ஆகும். அதிலும் நிலவின் தென் துருவத்தை முதன் முறை ஆய்வு செய்யவுள்ள இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் தனது பிரதான தேடுதலாக நிலவில் மனித இனம் வருங்காலத்தில் குடியிருப்புக்களை அமைக்க ஏற்ற விதத்தில் அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் அல்லது உயிரியல் மூலக்கூறுகள் உள்ளனவா என்பதைக் கண்டறிவதை மையப் படுத்தியுள்ளது.

இதற்கு ஏற்ற விதத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறி நிலவின் தரை மேற்பரப்பை பிரக்ஞான் என்ற ரோவர் 7 நிலவு நாட்களுக்கு ஆய்வு செய்யவுள்ளது. இது சூரிய சக்தியில் இயங்கக் கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction