free website hit counter

விண்ணுக்கு நாசாவின் வீரர்களைக் கொண்டு சென்று மீளத் திரும்பும் ஸ்பேஸ் எக்ஸின் புதிய ஓடம்!

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகின் முன்னணி ராக்கெட்டு மற்றும் விண் ஓடங்கள் தயாரிப்பு நிறுவனமான எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பூமியில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டு மூலம் செலுத்தப் பட்டு மீளவும் வீரர்களை சுமந்து கொண்டு பாரசூட் உதவியுடன் பூமியில் இறங்கக் கூடிய செயற் திறன் மிக்க டிராகன் கேப்சூல் என்ற ஓடத்தைத் தயாரித்துள்ளது.

வரலாற்றில் மனிதர்களை சுமந்து சென்று மீளத் திரும்பக் கூடிய அமெரிக்காவின் 5 ஆவது விண் ஓடம் இந்த டிராகன் கேப்சூல் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பேஸ் எக்ஸின் பொறியியலாளர்கள் 27 ஆவதும், இறுதியுமான இதன் பாரசூட் பொறிமுறையைப் பரிசோதித்துள்ளனர். மொஜாவே பாலைவனத்தில் இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப் பட்ட போது இது விண்ணுக்கு மனிதர்களைச் சுமந்து செல்லத் தயாராகி விட்டது என்பதை அவர்கள் அறிவித்துள்ளனர்.

நாசாவினால் இந்த விண் ஓடம் அங்கீகரிக்கப் படுவதற்கு இரு விண்வெளி வீரர்களை இந்த டிராகன் ஓடம் பாதுகாப்பாக சுமந்து சென்று மீளத் திரும்புகின்றதா என்பது வெள்ளோட்டம் நடத்தப் படுவது அவசியமாகும். இதற்காக மே 27 ஆம் திகதி நாசா வீரர்களான பொப் பெஹ்ன்கென் மற்றும் டௌக் ஹுர்லே ஆகிய இருவரையும் புளோரிடாவில் உள்ள கென்னெடி ஏவுதளத்தில் இருந்து பூமியைச் சுற்றி வரும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு இந்த டிராகன் ஓடம் சுமந்து செல்லவுள்ளது.

Demo-2 என்ற இந்த செயற்திட்டம் குறித்த டிராகன் ஓடம் பாவிக்கத் தகுந்தது தான் என 95% வீதம் உறுதி செய்யப் பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதர்களுக்கான முதல் விண் ஓடத்தை 1981 இல் தயாரித்து இருந்த நாசா நிறுவனம் 2011 ஆமாண்டுக்குப் பின்னர் ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு மனிதர்களை சொந்த மண்ணில் இருந்து அனுப்பவில்லை என்பதும், அதன் பின் ரஷ்ய விண் ஓடங்கள் மூலம் மாத்திரமே மனிதர்கள் ISS இற்குச் சென்று வந்தனர் என்பதும் கூடக் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction