free website hit counter

அண்ட்ரோமிடா அண்டம் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததையா நாம் காண்கின்றோம்?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாம் வாழும் பூமி மற்றும் சூரியன், ஏனைய கிரகங்கள் அடங்கலான சூரிய குடும்பம் அமைந்துள்ள எமது பால்வெளி அண்டத்துக்கு (Milkyway Galaxy) இற்கு மிக அண்மையிலுள்ள அண்டம் அண்ட்ரோமிடா (Andromeda Galaxy) ஆகும்.

இந்த அண்டம் பூமியில் இருந்து 2 537 000 ஒளியாண்டுகள் அதாவது 2.5 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.

அப்படியானால் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருப்பது அண்ட்ரோமிடா அண்டத்தின் 21/2 மில்லியன் பழமையான தோற்றத்தைத் தானா? இப்போது அந்த அண்டத்தில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாதா? போன்ற கேள்விகள் எழுவது வாடிக்கை தான். இதற்கு ஆம் மற்றும் இல்லை என இரு விதமாகவும் பதில் கூறலாம். ஏனெனில் ஒரு அண்டத்தைப் பொறுத்தவரை 2.5 மில்லியன் வருடங்கள் என்பது ஒரு கண் சிமிட்டலுக்கு இணையான காலம் தான்.

உண்மையில் இந்த ஒரு சிமிட்டலில் அதாவது 2.5 மில்லியன் வருடங்களில் மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் அழிந்தும், மில்லியன் கணக்கானவை தோன்றியும் இருக்கலாம். ஆனால் அண்ட்ரோமிடா அண்டம் கொண்டிருக்கும் சில டிரில்லியன் அளவு நட்சத்திரங்களுடன் ஒப்பிடுகையில் இவை மிகக் குறைவு தான். இந்த அண்டத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் 99.999% வீதமான நட்சத்திரங்கள் இன்னமும் அப்படியே தான் உள்ளன. இவை குறிப்பிடத்தக்க எந்தவொரு மாற்றத்தையும் அடையவில்லை. எமக்கு மிக அவசியப் பட்டால் இறந்து போன நட்சத்திரங்களைக் கூட நாம் கண்டு பிடிக்க முடியும். முக்கியமாக பிரகாசம் நிறைந்த நட்சத்திரங்கள் எனில் மிக இலகுவாகப் பார்க்கவும், அடையாளம் காணவும் முடியும்.

ஒரு அண்டத்தில் அமைந்துள்ள நட்சத்திரங்களின் இருப்பானது (Position), ஒரு அண்டத்தின் பூரண அசைவில் மாற்றம் அடைய மில்லியனுக்கும் சற்று அதிகமான காலத்தைத் தான் எடுத்துக் கொள்கின்றது. எனவே நட்சத்திரங்களின் அமைவிடம் எங்கிருந்தது மற்றும் எந்தத் திசையில் அவை அசைந்து கொண்டிருந்தன என்பதை நாம் அறிந்து கொண்டால் இந்த நட்சத்திரங்களின் நிகழ்கால அமைவிடங்களை (Coordinates) நாம் நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.

எனினும் ஒரு உதாரணத்துக்கு அண்ட்ரோமிடா அண்டத்தில் மனித இனக் குடிகளுக்கு இணையான குடிகள் (Civilization) இருந்து அவற்றிடம் இருந்து எமக்கு சமிக்ஞை கிடைத்திருந்தால் குறித்த உயிரினக் குடிகளுக்கு இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிய இதுவரை எந்தவொரு வழியும் இல்லை. ஆனால் மிகப் பெரிய நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களுடன் நாம் தொடர்பு ஏற்படுத்த முயற்சிக்கின்றோம் எனில் 2.5 மில்லியன் வருடங்கள் என்பது ஓரளவு மும்மொழியக் கூடிய வருங்காலம் தான்.

இதேவேளை பூமியில் இருந்து அண்ட்ரோமிடா அண்டம் மிகத் திருத்தமாக 2 537 000 ஒளியாண்டுகள் தூரத்தில் தான் உள்ளது என யாராலும் அறுதியிட்டு சொல்ல முடியாது. ஏனென்றால் இந்தளவு திருத்தமாக அதனைக் கணிப்பது என்பது ஒளி வருடங்களைப் பொறுத்தவரை மிகவும் அசாதாரணம் ஆகும்.

நன்றி - Quora

-4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula