free website hit counter

பேர்லினில் கிரிஸ்டல் கரடி விருது வென்ற  It's Okay!

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில்  போட்டியிட்ட It's Okay!  கொரியன் திரைப்படம், ஜெனரேஷன் கேபிளஸ் பிரிவின் முதன்மை விருதான கிரிஸ்டல் கரடி விருதினை வென்றிருக்கிறது.

18.02.24 ஞாயிறு காலை 09.30 மணிக்கு இந்தப்படத்தின் முதற்காட்சி Zoo Palast 1 சினிமாவில்.  அனுமதிச் சீட்டுக்கள் யாவும் முதல்நாளிலேயே விற்றுத் தீர்ந்துவிட்டது என இணையத்தளம் காட்டியது. ஆனாலும் ஞாயிறு காலை எத்தனைபேர் வந்துவிடக் கூடும் எனும் எண்ணத்துடன் சென்ற  எமக்கு, அந்தப் பெரிய அரங்கம் முழுமையாக நிறைந்திருந்து ஆச்சரியம் தந்தது. ஆனால் அதை விட ஆச்சரியத்தையும்,  மனதில் மகிழ்ச்சியையும் தந்தது  It's Okay! 

மிகச் சாதாரணமான ஒரு தன்னம்பிக்கைக் கதைதான். அதனைச் சரியான திரைக்கதை வடிவத்தாலும், உள்டக்கத்தாலும் ஒரு கலைப்படைப்பாக மாற்றியிருக்கின்றார் இயக்குனர் கிம் ஹை-யங்  (Kim Hye-young). இது அவரது முதற்படம். ஆனாலும் எதுவித குழப்பங்களும் இன்றித் தெளிந்த நீரோட்டமாகப் படைத்துள்ளார். சினிமாவிற்கு கதைதேவை. ஆனால் மொழி முக்கியமில்லை எனும் எண்ணத்தை திரையில் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றார்கள் கலைஞர்கள். அதில் நடன ஆசிரியை சியோல் ஆக வரும் (  Jin Seo-yeon ) ஜின் சியோ-யோன் தவிர மற்றவர்கள் யாவரும் இளையவர்கள். குறிப்பாக மாணவி  இன்-யோங்காக நடித்த லீ ரே படத்தின் மொத்த ஜீவனையும் தன் நடிப்பிலும், குறும்பிலும், மொத்தப் பார்வையாளர்களையும் கட்டிப் போடுகின்றார். 

ஏழ்மையும் துயரமுமான வாழ்க்கையை  நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் ஒரு பள்ளி மாணவி, எவ்விதம் எல்லோரையும் நம்பிக்கையுற வைக்கிறாள் எனும் ஒற்றைவரிக் கதையினை அழகியலாகவும், அதனோடினைந்த நகைச்சுவையோடும்,  இழையோடும் மனித மான்புடனும் திரையில் காட்சிகளாகத் தருகையில் அது அழகான சித்திரமாகப் பார்வையாளர்களிடத்தில் பதிந்துவிடுகிறது.

" இந்தத் திரைப்படம் நம்மை தைரியமான கதையுடனும் நகைச்சுவையுடனும், உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டர் சவாரிக்கு அழைத்துச் சென்றது. இரண்டு வித்தியாசமான கதாபாத்திரங்கள் எப்படி ஒருவரையொருவர் கண்டுபிடித்தார்கள் என்பது அழகாகக் தொகுக்கப்பட்டிருக்கிறது. அந்நியமான கலாச்சாரத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை எங்களுக்கு வழங்கிய  நடனக் காட்சிகளை விரும்பினோம்." என்ற நடுவர்களின் குறிப்பில் வரும் வரிகள், படம் பார்த்த பார்வையாளர்களின் மொத்த அனுபவமாக இருக்கும்.

படம் முடிந்து அறிமுகத்திற்காகவும் கேள்வி பதிலுக்காககவும், இயக்குனரும், நடிகர்களுமென நான்கு பெண்கள் அரங்கத்திற்கு  வந்தார்கள். அவர்கள் யாருமே ஆங்கிலம் தெரிந்தவர்கள் அல்ல. ஆனால் தங்கள் தாய்மொழியையும், தமது கலைகளையும், நிறைந்த நேசிப்போடு, உருவாக்கிய படைப்பு, உலகத் திரைப்படவிழாவில் பலரது உள்ளத்தினைக் கவர்ந்தது மட்டுமல்லாது பெறுமிதி மிக்க கிறிஸ்டல் கரடி விருதினையும் வென்றிருக்கிறது.

- 4தமிழ்மீடியாவிற்காக : மலைநாடான்

At the Berlin International Film Festival, the Korean film "It's Okay!" directed by Kim Hye-young won the Crystal Bear Award for the Generation Kplus section.

The premiere of this film took place on Sunday, February 18th, 2024, at 9:30 AM at Zoo Palast 1 cinema. Despite online tickets being sold out on the first day itself, the turnout on Sunday morning exceeded expectations, filling the entire auditorium with surprise and joy.

"It's Okay!" is a simple yet profound story that, through its narrative and performances, transforms into a masterpiece. Director Kim Hye-young, in her debut, has crafted a film that resonates deeply. The film emphasizes the need for a compelling narrative in cinema, transcending language barriers to touch the hearts of audiences. Actress Jin Seo-yeon and others deliver remarkable performances, capturing the essence of the characters with finesse.

The film portrays the life of a schoolgirl who confronts the complexities and challenges of life with unwavering faith and belief in humanity. It presents a beautiful depiction of hope, accompanied by humor and empathy, making it visually stunning and emotionally captivating for viewers.

The filmmakers' dedication to portraying a realistic portrayal of life's struggles, combined with their artistic vision, has earned them praise from critics and audiences alike. The film's ability to blend compelling storytelling with humor and poignant moments has impressed viewers.

The presence of four actresses, none of whom are fluent in English, at the international film festival highlights the power of art to transcend language barriers and connect people through shared emotions and experiences. Crystal Bear Award for the film is not just an accolade but a testament to its universal appeal and the recognition it has garnered at the world stage.

- Translated by Malainaadaan

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction