தமிழ்நாடு முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல் ஆணையர் பதவியில் இருந்த ரவி கடந்த 31ம் தேதி பணி ஓய்வு பெறறார். அந்த பதவி காலியாக உள்ளது. ஆவடி ஆணையர் அந்த பதவியை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிலையில், தற்போது, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குனராக இருந்த அமல்ராஜ் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தாம்பரம் இரண்டாவது காவல் ஆணையராக பதவியேற்கிறார்.
இதேபோல் அண்மையில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த கண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆயுதப்படையின் ஐஜியாக அவர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தேன்மொழி வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக மகேஷ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன், நெல்லை மாநகர காவல் ஆணையராக அவினாஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். புததாக உருவாக்கப்பட்ட சைபர் கிரைம் செல் போன்ற பதவிகளுக்கும் கண்காணிப்பாளர்கள் நிமியக்கப்பட்டுள்ளனர்.