free website hit counter

நாளை I2U2 உச்சி மாநாடு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது.
இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் 'ஐ2யு2' என்ற பெயரில் ஒரு அமைப்பாக இணைந்துள்ளன. இந்த அமைப்பின் நோக்கம் நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீட்டினை ஊக்கப்படுத்துவது ஆகும்.

இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு காணொலி காட்சி வழியாக நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் யாயிர் லாபிட், ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction