free website hit counter

அரசு பஸ்களில் 177 கோடி பெண்கள் இலவச பயணம்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
தி.மு.க. அரசு புதிதாக பொறுப்பேற்றவுடன் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதற்கு தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அரசு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், அதிகளவில் பயன்பெற்று வருகிறார்கள்.

அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு செல்லக் கூடிய பெண்கள் கூட இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர். நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் உள்ளவர்களும் இலவச பயணத்தை அதிகளவில் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த திட்டம் தொடங்கியது முதல் நேற்று முன்தினம் வரை தமிழகம் முழுவதும் 176 கோடியே 84 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

சென்னை உள்பட 7 அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் இந்த வசதி அளிக்கப்பட்டு வருகிறது. மகளிர் மட்டுமின்றி 10 லட்சத்து ஆயிரம் திருநங்கைகளும் தமிழகம் முழுவதும் கட்டணமின்றி பயணம் செய்திருந்தனர். 1 கோடியே 29 லட்சம் மாற்று திறனாளிகளும், அவர்களுடன் 6 லட்சத்து 55 ஆயிரம் உதவியாளர்களும் பயணம் செய்துள்ளனர்.

தினமும் சராசரியாக 39 லட்சத்து 21 ஆயிரம் பெண்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்கின்றனர். இது மொத்த பயணிகளில் 63 சதவீதமாகும்.

மகளிர் இலவச பயணத்திற்கான கட்டண செலவை ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு போக்குவரத்து கழகங்களுக்கு அரசு வழங்கி வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction