கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04.00 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொது நிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Comments powered by CComment