free website hit counter

இத்தாலியில் குரங்கு அம்மை தொற்று !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குரங்கு அம்தை என்பது ஒரு அரிய வைரஸ் தொற்று. இது மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது. சமீபத்தில் கேனரி தீவுகளில் இருந்து திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மைநோய் அடையாளம் காணப்பட்டதாக ரோமின் தொற்று நோய்களுக்கான ஸ்பல்லாஞ்சனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோய் தொற்று கண்டறியப்பட்ட அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல நிலையில் உள்ளநிலையில் மேலும் இரண்டு சந்தேகத்திற்கிடமான தொற்றுக்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரோமை உள்ளடக்கிய Lazio பிராந்தியத்தின் சுகாதார ஆணையர் Alessio D'Amato, இது நாட்டின் முதல் தொற்று என்பதை சமூக ஊடகங்களில் உறுதிப்படுத்தினார், மேலும் நிலைமைதொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் கோடை வெப்பநிலை 40 பாகை வரை உயரலாம் !

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல்லில் குரங்கு காய்ச்சலின் தொற்றுக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு 40 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தபட்ட தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இந்த நோய் சமீபத்திய ஆண்டுகளில் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துள்ளது, ஆனால் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவிற்கு இது புதிதானது. இதன் அறிகுறிகள் பெரியம்மை நோயை விட சற்றே லேசானவை, ஆனால் காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குளிர், சோர்வு, நிணநீர் கணுக்கள் வீங்குவது என்பன அடையாளமாகும்.

ஒன்று முதல் மூன்று நாட்களுக்குள், நோயாளிக்கு ஒரு சொறி உருவாகிறது, அடிக்கடி முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. பெரும்பாலான குரங்கு அம்மைத் தொற்றுக்கள் தீவிரமானவை அல்ல என்றாலும், ஆப்பிரிக்காவில் இந்த நோயால் பாதிக்கப்படும் பத்து பேரில் ஒருவர் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலக சுகாதார அமைப்பு செவ்வாயன்று இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சுகாதார அதிகாரிகளுடன் புதிய தொற்றுக்கள் குறித்து ஒருங்கிணைத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction