இத்தாலி தனது நாட்டிற்குள்ளான நுழைவு கட்டுப்பாடுகளை மே 16 ல் தளர்த்தியுள்ளதால், சுவிஸ் குடியிருப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் இத்தாலிக்குப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக கோடை விடுறைக்கான முன்பதிவுகளை செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் "டூரிஸ்டிக் சுற்றுலா நிறுவனத்தின் ( Touristik tour agency )பொது மேலாளர் கார்மென் டோரே கூறுகையில், "கிட்டத்தட்ட எல்லா இடங்களுக்கும் தேவை ஒரு பொதுவான வளர்ச்சியை நாங்கள் கவனித்திருக்கிறோம், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இத்தாலிக்கு இந்த எண்ணிக்கை உண்மையில் அதிகரித்து வருகிறது" என்றார்.
"சுவிஸ் சுற்றுலாப் பயணிகளிடையே சர்தீனியா, சிசிலி மற்றும் கலாப்ரியா என்பவற்றின் மீதான ஆர்வம் அதிகமாக இருப்பினும், சுவிற்சர்லாந்திற்கு அன்மிய தூரத்தில் உள்ள லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் டஸ்கனி போன்ற பகுதிகளுக்கும் விருப்பங்கள் அதிகமாக உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.