சீனாவில் ஹெனான் மாகாணத்தில் மழை வெள்ளத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயிள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக மத்திய சீனாவில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஹெனான் எனும் மாகாணம் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. அம்மாகாணத்தின் தலைநகரில் உள்ள சாலையோர வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்நகரம் நிலைகுலைந்துள்ளது.
நேற்று ஒரு நாள் மட்டும் ஒரு மணி நேரத்தில் 20 சென்டி மீட்டர் மழை பெய்தமையால் மஞ்சள் ஆறு மற்றும் ஹைஹே நதிகளின் துணை நதிகளின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி ஓடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் அனர்த்தம் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. அந்நகர போக்குவரத்து தடைபட்டிருப்பதோடு ரயில் மற்றும் விமான சேவைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெள்ள அனர்த்தத்தில் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.