ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மூன்று முக்கிய நகரங்களில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தலிபான் போராளிகள் ஆப்கானிஸ்தானின் ஹெராட், லஷ்கர் காஹ் மற்றும் கந்தஹார் பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கந்தகார் விமான நிலையத்தில் ஏவுகணைகள் மோதியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செப்டம்பர் மாதத்திற்குள் கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டு படைகளும் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கப்பட்டது முதல் கிராமப்புறங்களை அரசாங்கப் படைகளிடமிருந்து தலிபான்கள் கைப்பற்ற முயன்றுவருவதால் இம்மோதல்கள் அதிகரித்துள்ளது.
அடிப்படைவாத இஸ்லாமிய போராளிகள் ஏற்கனவே ஈரானுடனும் பாகிஸ்தானுடனும் இலாபகரமான எல்லைக் கடப்புகள் உட்பட ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் பாதி வரை கைப்பற்றப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.
இதேவேளை கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் மோசமான பாதிப்பையும்; கொரோனா பாதிப்புக்களுடன் இத்தாக்குதல்களையும் ஆப்கானிஸ்தான் சந்தித்துள்ளது குறிப்பிடதக்கது.