நாகரீகமற்ற மனித சமூகம் வாழும் நாடாக மாறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் மாதாந்தம் 40 முதல் 50 வரையிலான படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடு அராஜக நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், நாகரீகமற்ற மனித சமூகம் வாழும் நாடாக மாறியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம், காணிப் பிரச்சினை, தகாத உறவு போன்ற காரணிகளினால் இடம்பெறும் மனித படுகொலைகளை தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை டலஸ் அழகப்பெருமவின் இந்த குற்றச்சாட்டுக்கு, போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் விரிவான திட்டமொன்று முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.