ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எதிர்வரும் 06ஆம் திகதி பதவியேற்கவுள்ள பஷில் ராஜபக்ஷ, அன்று மாலையே ஜனாதிபதி முன்னிலையில் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே, பஷில் ராஜபக்ஷ முக்கிய அமைச்சுக்களைப் பொறுப்பேற்கவுள்ளார்.
பஷில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்துக்கு நுழைவதற்கு வாய்ப்பாக, பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என அறியமுடிகின்றது.