இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் சவால்கள் காணப்பட்டாலும், மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவர்களுடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இயற்கை உரங்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. சில தரப்பினர் இதை விமர்சித்தாலும் எதிர்கால சந்ததியினருக்காக இந்த திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு இதன் அவசியத்தை எடுத்து செல்ல வேண்டும், இது உலகத்திற்கோ அல்லது நாட்டுக்கோ தீங்கனது அல்ல என்பதனால், எவ்வித சவால்கள் காணப்பட்டாலும் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள்.
வேளாண்மையில் இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்கான முடிவை அரசாங்கம் அவசரமாக எடுக்கவில்லை. இது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு கொள்கை அறிக்கையிலும் வரவு செலவுத் திட்டத்திலும் முன்வைக்கப்பட்டது.” என்றுள்ளார்.