இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் 5 போட்டிகள்
இரு அணிகளும் தலா 2 போட்டிகளை வெற்றி பெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி டி 20 போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்களை இழந்து 179 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் பொல்லார்ட் அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார்.
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கடைசி ஓவருக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்துவீசிய ஜேசன் ஹோல்டர் வீசிய நன்கு பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பாதைக்கு சென்றார்.
மேலும் டி 20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையையும் ஜேசன் ஹோல்டர்.
இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.பி.ல் மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், ஜேசன் ஹோல்டரின் இந்த சாதனை அனைத்து ஐ.பி.ல் அணி நிர்வாகிகளையும் ஈர்த்துள்ளது