free website hit counter

தேடல் அம்சத்தை விரிவுபடுத்தும் இன்ஸ்டகிராம்

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சமூக வலைத்தளங்களில் முன்னனி வகிக்கும் இன்ஸ்டகிராம் அதன் பாவனையாளர்களுக்காக புதிய தேடல் அம்சம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

இன்ஸ்டாகிராமில் தேடும் பகுதியில் இனி முக்கிய சொற்களை (keywords)பயன்படுத்தி தேடும் இலகு தேடல் அம்சத்தை சாத்தியமாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது நாள் வரை, இன்ஸ்டகிராம் பயனர்கள்; பகிரப்பட்டிருக்கும் ஹேஷ்டேக்குகள் அடிப்படையிலும் இருப்பிட குறிச்சொற்கள், பயனர்பெயர்கள் மற்றும் சுயவிவரப் பெயர்களால் மட்டுமே உள்ளடக்கத்தைத் தேட முடிந்தது.

தற்போது ஹேஸ்டேக்குகள் மட்டுப்படுத்தப்பட்டு, முக்கிய வார்த்தைகளுடன் உள்ளடக்கத்தைத் தேடும் திறனை இன்ஸ்டாகிராம் சேர்த்திருப்பது குறிப்பிடதக்கது.

அதாவது பயனர்கள் இப்போது புகைப்படம் மற்றும் வீடியோ தலைப்புகளில் தோன்றக்கூடிய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இடுகைகளைத் தேட முடியும்.

உதாரணமாக முன்பு “healthy recipes (ஆரோக்கியமான சமையல் குறிப்புகளைக்)” தேட விரும்பினால், #healthyrecipes ஹாஸ்டக்குடன் வரும் இடுக்கைகள்; அல்லது அந்தப் பெயரில் உள்ள பயனர் பக்கம் மட்டுமே காணமுடியும். இருப்பினும், இப்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றத்தால் ஆரோக்கியமான குறிப்பு எனும் குறிப்பிட்ட குறிச்சொல் கொண்ட எந்த பதிவுகளையும் காணலாம்.

எனினும் இந்த புதிய அம்சம் பயனர்களிடம் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அத்தோடு இது தற்போது கனடா, அமெரிக்கா, லண்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்தில் ஆகிய நாடுகளைச்சேர்ந்த இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் ஆங்கிலச் சொற்களை மட்டுமே உபயோகிக்கூடியதாக உள்ளது எனத்தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction