free website hit counter

எமது சூரியன் பால்வெளி அண்டத்தின் மையத்தைத் தவிர வேறு எதையும் சுற்ற வாய்ப்புண்டா?

அறிவியல்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

எமது பால்வெளி அண்டமோ (Milky Way Galaxy) அதன் அருகே இருக்கும் அண்டிரோமிடா (Andromeda) என்ற அண்டத்துடன் மோதுகையில் ஈடுபடும் வண்ணம் அதற்குள் விழுந்து கொண்டிருக்கின்றது.

இந்த இரு அண்டங்களுமே சாதாரண குழு (Local Group) என்ற அண்டங்களின் கூட்டின் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை சுற்ற வருகின்றன. இந்த லோக்கல் குருப் ஆனது விர்கோ சூப்பர் கிளஸ்டர் என்ற இன்னும் அதிக அண்டங்களை உள்ளடக்கிய தொகுதியை அதன் குறிப்பிட்ட ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு ஆர்பிட்டரில் சுற்றி வருகின்றது. இந்த விர்கோ சூப்பர் கிளஸ்டரோ லனியாகெயா (Laniakea) என்ற இன்னும் மிகப் பெரிய சூப்பர் கிளஸ்டர் ஒன்றின் bary center ஐ சுற்றி வருகின்றது. இந்த லனியாகெயா The Great Attractor என்றும் கூறப்படுகின்றது.

இந்த லனியாகெயா சூப்பர் கிளஸ்டர் தான் எமது பால்வெளி அண்டம் உட்பட கிட்டத்தட்ட 100 000 அண்டங்களின் கூட்டாகும். ஆனால் இவற்றை விட எமது கண்ணுக்குத் தெரியும் பிரபஞ்சம் (The Observable Universe) மிக மிகப் பெரியதாகும். இதுவரை எவராலும் பிரபஞ்சத்துக்கு மையம் ஒன்று உள்ளதா அல்லது அதற்கு மையம் உள்ளது என்பது ஒரு அர்த்தமுள்ள கொள்கையாக இருக்குமா என்பது குறித்து நிச்சயமாகத் தெரியாது.

ஆனால் குறித்த பகுதியில் இந்த வெப்பநிலை இவ்வளவு செல்சியஸ் C தான் என்று சொல்வதில் வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்கும். ஆனால் பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தையும் ஒன்றிணைந்து கூற அதற்கு எந்தவித அர்த்தத்தையும் வார்த்தைகளால் கற்பிக்க முடியாது. இது போன்றது தான் 'பிரபஞ்சத்தின் மையம்' என்ற வார்த்தைக்கான முழுமையான அர்த்தமும் ஆகும்..

நன்றி, தகவல் - Quora

- 4தமிழ்மீடியாவுக்காக நவன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction