டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியனும் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, வெண்கலப்பதக்கம் வென்றார்.
பேட்மிண்டனில் அரைஇறுதியில் தோல்வியுற்றாலும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனை ஹி பிங் ஜியாவை (சீனா) எதிர்கொண்டார். இதன்போது அபாரமாக விளையாடிய பி.வி. சிந்து ஆட்டத்தின் முடிவில் 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஹி பிங் ஜியாவை தோற்கடித்தார். இதனால் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தினார். வெண்கலம் வென்ற சிந்துவுக்கு இந்திய ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துவருகின்றனர்.
இதேவேளை 11 வது நாளான இன்று நடந்த பெண்கள் ஹாக்கி போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இதில் திறமையாக விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா அரைஇறுதிக்கு நுழைந்திருப்பது குறிப்பிடதக்கது.
இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவுடன் மோதவுள்ளது. அரையிறுதிக்குள் போராடி நுழைந்து புதிய சாதனைப்படைத்த இந்திய ஹாக்கி அணிக்கு பல்வேறு தரப்பினரால் பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.