free website hit counter

கேரளத்தில் மீண்டும் பெண் சுகாதாரத் துறை அமைச்சர்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கேரள மார்சிஸ்ட் கம்யூணிஸ்ட் கட்சியின் சார்பில், பினராயி விஜயன் தலைமையில் நேற்று பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையின் சிறப்பம்சங்கள் இதோ:

மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு அரசாங்கம் எத்தகைய தெளிவான பார்வையோடு தனது செயல்பாட்டினை துவங்கும் என்பதற்கு சிறந்த உதாரணமே கேரள எல்.டி.எஃப் அரசு. புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 21 அமைச்சர்களில் 17 பேர் புதியவர்கள் மார்க்சிஸ்ட் கட்சி அமைச்சர்கள் 12 பேரில் 11 பேர் புதியவர்கள். மார்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்த சகோதரக் கட்சியான, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பதவியேற்றுள்ள 4 அமைச்சர்களும் புதியவர்களே. முதல்வர் பினராயி விஜயன் தவிர அனைவரும் 60 வயதிற்குட்பட்டவர்கள்.

மூன்றாவது முறையாக இடது ஜனநாயக முன்னணி சுகாதாரத்துறை அமைச்சராக பெண்ணையே நியமிக்கிறது. இம்முறை தான் 3 பெண் அமைச்சர்கள் பொறுப்பேற்று இருக்கிறார்கள். கடந்த காலங்களில் 2 பேர் பெண் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர். கடந்த ஆட்சிகாலங்களில் 2006-2011 ஶ்ரீமதி டீச்சர், 2016-2021 சைலஜா டீச்சர் தற்போது 2021-2026 - வீணா ஜார்ஜ். இவர், கடந்த 2016 ல் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு வரை செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவர். பினராயி தலைமையிலான இரண்டாவது அரசாங்கம் அமைச்சர்களுடன் பணியாற்ற இருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவரையும் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் 51 வயதுக்குட்பட்டவர்களாக தேர்வு செய்துள்ளது. கேரளத்தில் அரசு ஊழியரின் ஓய்வு வயது 56 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction