மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நாள் நினைவு நாள் அனுசரிக்கப்படும் இன்றைய தினதில் நூற்றாண்டு விழா பாராதியார் நினைவு இல்லத்தில் நடைபெறுகிறது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர். தமது பாடல்கள் மூலமாக மக்களை எழுச்சியுற செய்தவர்.
இந்நிலையில் மகாகவி மறைந்த 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகத்தில் சில நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாண்டை பாரதியார் நூற்றாண்டு என குறிப்பிட்டுள்ளதுடன் இனி இந்நாள் மகாகவி நாள் என அனுசரிக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.
மேலும் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் பாராதியாரின் நினைவு நூற்றாண்டு நினைவு விழா நடைபெறுகிறது இதில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட உள்ள பாரதி சுடரை ஏற்றிவைத்தார். அங்கிருந்த பாரதியாரின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
இதேவேளை மகாகவி பாரதியாரை நினைவுகூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியீட்டுள்ளார் அதில் மகாகவி பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்” என தெரிவித்துள்ளார்.