free website hit counter
28
ஞா, ஏப்

விஜய்க்கு நான் வில்லனா? நானியின் மேனேஜர் பதில்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தளபதி விஜய் நடித்துவரும் அவருடைய 65-வது படம் 'பீஸ்ட்'. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை, ஹைதராபாத், டெல்லி என மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தன்னுடைய 66-வது படத்தையும் விஜய் முடிவு செய்துவிட்டார்.

இம்முறை முதல் முறையாக ஒரு நேரடித் தெலுங்குப் படத்தில் விஜய் நடிக்கிறார். இது தமிழிலும் தயாராகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடி பல்லி சொன்ன கதை விஜய்க்குப் பிடித்துபோனதால் அவருக்கு கால்ஷீர் கொடுத்துள்ளார். விஜயின் இந்த 66-வது படத்தை தெலுங்கு மற்றும் தமிழில் இவரே இயக்க உள்ளார். இப்படத்தின் தொடக்கக் கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் வில்லனாக நான் ஈ படத்தில் நடித்த நானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விஜய்யின் ரசிகர் ஒருவர், நானியின் மேனேஜரிடம் ‘டியர் சார்.. உங்கள் ஹீரோ எங்களுடைய தளபதியின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ருக்கிறாரா?’ என்று கேட்டு அவரது ட்விட்டர் கணக்கை டேக் செய்தார். அதற்கு பதில் சொல்லாமல் புன்னகை தவழும் ஸ்மைலி ஒன்றை பதிலாக அளித்துள்ளார் நானியின் மேனேஜர். படத் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக அறிவிக்க வேண்டும் என்று நினைக்கிறார் போலும். அதேபோல் நானி முன்னணி நாயகனாக இருக்கிறார். அவரது படங்கள் 80 முதல் 100 கோடி வசூல் செய்கின்றன. படப்பிடிப்புக்காக தனி விமானங்களில் பறப்பவர் நானி. அவர் விஜய்க்கு வில்லனாக நடித்தால், அது மிகவும் பேசப்படும் ஒன்றாக மாறும்.

Ula

new-year-prediction