free website hit counter

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழக சட்டசபைக்கான தேர்தல் 2026 ஏப்பிரல் 23ந் திகதி நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் மே 04ந் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம்தமிழர், தமிழக வெற்றிக்கழகம் என்பன கடும்போட்டியில் நிற்கின்றன. இம்முறை தேர்தல்களம், வழமையான திராவிடகட்சிகளின் போட்டிக்களமாக மட்டுமல்லாது, சீமான் தலைமையிலான நாம்தமிழர் மற்றும், விஜய் தலைமையிலான தவெக ஆகிய கட்சிகள், அரசியல் மாற்றுக் கட்சிகளாக கடும் போட்டியிலிருக்கின்றன. 

பராம்பரியமான திராவிடக்கட்சிகளில் ஒன்றாகிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக காங்கிரஸ் கூட்டணயில் வழமையான கட்சிகளுடன், புதிதாக தேமுதிக வும் இணைந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகால ஆட்சி நடைமுறைகளில் பொது மக்களிடம் கடும் அதிருப்தி கண்டுள்ள கட்சியாக அடையாளப்படுத்தப்படுகிறது. 

இதற்கு எதிரான கட்சியான அதிமுக, மத்தியில் ஆளுங் கட்சியாகவுள்ள பாஜகவுடனும், வேறுசில கட்சிகளுடனும் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. திமுகவிற்கு சவாலாக இருக்கும் இக்கட்சியின் பாஜக கூட்டு, திராவிடச் சிநதனையாளர்களால் நிராகரிகப்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.

எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லை என்றவாறே, தமிழ்த்தேசியக் கொள்கையுடன் களம் காணும் சீமான் தலைமையிலான நாம்தமிழர்கட்சி, கொள்கை ரீதியான ஒரு ஸ்திரமான கட்சியாக வளர்ந்திருக்கிறது.திராவிடக்கட்சிகளின் நியாமற்ற பல செயற்பாடுகளை, கருத்து ரீதியாக எதிர்த்து வரும் இக் கட்சியில் பெண்களுக்கான முக்கியத்துவம் மற்றும் இளையவர்கள், படித்தவர்கள், பல்வேறு மக்களையும், வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. கடுமையான போட்டியினை ஏனைய கட்சிகளுக்கு கொடுக்கும் நிலையில் இருக்கிறது நாம் தமிழர்.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், முதல் முறையாக தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறது. பல்வேறு தடைகள், அரசியற் தாக்குதல் இருந்த போதும், தமிழக மக்களின், குறிப்பாக இளையவர்களின், பெண்களின்  பரவலான ஆதரவினைப் பெற்றுள்ள கட்சியாகக் காணப்படுகிறது. நல்ல மக்கள் ஆதரவுள்ள கட்சியாக இருந்த போதும், ஒரு புதிய கட்சிக்கே இருக்கக் கூடிய தடுமாற்றங்களுடனேயே களத்தில் நிற்கிறது. ஆயினும் பல தொகுதிகளிலும், எதிர்த்துப் போட்டியிடுபவர்களுக்கு மிகக் கடுமையான போட்டியினைக் கொடுப்பார்கள் என்றே பலரும் தெரிவிக்கின்றார்கள். 

இவ்வாறான நான்கு முனைப் போட்டியாக தமிழத் தேர்தல் காணப்பட்டாலும், பெரும்பாலும் பல இடங்களிலும் இருமுனைப் போட்டிகளாகவே இருப்பதாகவும், எந்தவொரு கட்சிக்குமான வெற்றி வீதம் குறித்து இதுவரை யாரும் திடமாகச் சொல்லவில்லை என்பதும் முக்கியமானது. அந்த வகையில் கடும் போட்டிக்களமாக இருக்கும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலின் முடிவுகள், தனிப்பெரும்பாண்மையுடன் எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்கும் நிலையை நிச்சயம் மாற்றிவிடும் என்றே கருதப்படுகிறது.  அந்த மாற்றத்தில் நாம் தமிழர் கட்சிக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் கணிசமான பங்கு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்டுகிறது.  

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது எதிர்பார்ப்புக்களை மீறிய முடிவாகவே இருக்கிறது. தமிழக மக்கள் நாளை வழங்கும் வரலாற்றுத் தீர்ப்பின் முடிவுகள் மே 4ந் திகதி  புதிய செய்தியினைச் சொல்லும் என எதிர்பார்க்கலாம்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula