free website hit counter

வங்கத்தின் இந்துக்களும் வாழ வேண்டும் !

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடக்கும் வன்முறைகள் மிகவும் கஷ்டமான ஒரு நிலைமையாக உள்ளது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை, இந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழும் நிலை தொடரும். உலகெங்கிலும் சிறுபான்மையினங்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த  வண்ணமேயுள்ன.

காசாவில் முஸ்லீம்கள் தாக்கபடுகிறார்கள். அவர்கள் மீது இரக்கமற்ற தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. வங்கத்தில் முஸ்லீம்கள் சிறுபான்மை இந்துக்களைத் தாக்குகின்றார்கள். இதற்கான அடிப்படைக் காரணங்கள் பலவாக இருப்பின் முதன்மைக் காரணம், அரசியல் அதிகாரம். இவற்றை நீக்குவதற்கும், நிறுத்துவதற்கும், அரசியல், சட்டம், மற்றும் சமூக அளவில் கூட்டு முயற்சிகள் உலகளாவிய ரீதியில் தேவையாக உள்ளன.

வங்க தேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நிகழும் வன்முறைகள் தொடர்ந்து வருவதாகவும்,  இந்தத் துன்புறுத்தல்களுக்கு,  அந்நாட்டில் இடைக்கால அரசின் தலைவரே காரணம் என்று வங்க தேசத்தின்  முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியுள்ளார். 

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான மாணவா்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தீவிரமடைந்தன. அதனைத் தொடர்ந்து,  பிரதமா் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்து விட்டு, நாட்டைவிட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். 

அவரை இன்டர்போலின் உதவியுடன் வங்கதேசத்திற்கு மீளக் கொண்டு வரும் முயற்சியும் நடைபெற்றது.  இந்நிலையில் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், காணொலி வழியாக பேசிய போதே ஷேக் ஹசீனா மேற்படி குற்றச்சாட்டினைச் சொல்லியுள்ளார்.

பங்களாதேஷ் அதிகாரிகள் கடந்த வாரம் இந்து மதத் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸை தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ததைத் தொடர்ந்து , இந்தியாவின் வட மாநிலங்களில் பல ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.  வடகிழக்கு இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ள அகர்தலாவில் பங்களாதேஷ் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இரு நாட்டு உறவுகளில் கனதியான தாக்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த முறுகல்நிலை, வங்கத்தின் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்த பின், அங்கிருந்து கொண்டு, தற்போதைய இடைக்கால அரசையும்,  பொருளாதார நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகத்தை விமர்சிக்கத் தொடங்கியதிலிருந்தே  இந்தியாவுக்கு எதிரான நிலை வங்கத்தில்  அதிகரித்துள்ளன.

இந்தப் பிரச்சனை எங்கிருந்து தொடங்கி, எவ்வாறு தொடர்கிறது என்பது குறித்து சற்றுப் பார்க்கலாம். வங்கதேசத்தில் இந்துக்கள் குறித்த பிரச்சினைகள் பல தளங்களில் வெளிப்படுகின்றன. வரலாற்றுச் சூழல்களும் சமகால அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் மேம்படுத்தும் ஒரு சர்ச்சையான விஷயமாக இவை அமைந்துள்ளன.

வரலாற்று சூழல் மற்றும் மாற்றங்கள்

    1947 பிரிவினை: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைச் சமயத்தில் (பாகிஸ்தான் உருவான போது), வங்காள பகுதியின் ஒரு பகுதியாக இருந்த தற்போதைய வங்கதேசத்தில் பல இந்துக்கள் வன்முறையால் இடம்பெயர்ந்தனர்.
    1971 சுதந்திரப் போராட்டம்:
        பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் சுதந்திரம் அடைந்த போது நடந்த போரின் போது,        இந்துக்கள் முக்கிய குறியாக இருந்தனர். அச்சம் மற்றும் நெருக்கடியால் பல இந்துக்கள்         இந்தியா போன்ற இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.

 சமகால வன்முறைகளின் நிலைமை
       இந்து கோயில்கள்  வெறுப்பு மற்றும் வன்முறை குழுக்களின் அடிக்கடி தாக்குதலுக்குப்        பாதிக்கப்பட்டுள்ளன.  இவற்றுடன் சேர்ந்து மதஸ்தலங்கள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
    புகார் முறைகள்:
        பலர் கூறுவதுபோல், மத அடிப்படையில் மிதமான புலனாய்வுகளும் விசாரணைகளும்         நடைபெறுகின்றன. ஆனாலும் சில அதிகாரிகள் இந்துக்களை பாதுகாப்பதில் குறைவாகவே         செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

சமூக ஊடக பரப்புரைகள்:
         சமூகவலைதளங்களில், மத வெறுப்பை தூண்டும் தவறான செய்திகள் மற்றும்                  உண்மையற்ற தகவல்கள், குழப்பநிலையினை வெகுவாக உருவாக்குகின்றன.
        குறிப்பாக 2021  குமில்லா புஜா விழாவின் போது, சமூக ஊடகத்தில் புனித குரானின்                        அவமதிப்பு பற்றிய தவறான தகவல் பரவியது.  இதனால், பல கிராமங்களில் இந்துக்களின்          வீடுகள், கடைகள், கோயில்கள் தீவைத்து அழிக்கப்பட்டன.

வன்முறையின் காரணங்கள்

    மத அடிப்படையான அரசியல் காரணமாக, அரசியல் கட்சிகள் சமய அடிப்படையிலான  சண்டைகளை                        தூண்டுவதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது   
     அரசியல் சீர்திருத்தங்களில் இந்துக்களின் உரிமைகளும் முக்கியத்துவமும்      புறக்கணிக்கப்படுகின்றன.
      குறைந்த கல்வி மற்றும் வேலை வாய்ப்பினால், மத அடிப்படையில் குற்றச்செயல்களுக்கான       நிலைமை உருவாகிறது.

இதனை சரியான முறையில் நீக்க வேண்டும் என்றால்,  சிறுபான்மையினரின் நிலைமைகளை மேம்படுத்தும் முன்முயற்சிகள் உருவாகவேண்டும்.  சிறுபான்மையினர் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட சட்டங்கள் கொண்டு வர வேண்டும்.  மத அடிப்படையிலான வன்முறைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை உயர்த்தும் கல்வி நடவடிக்கைகள் தேவை. க மட்டத்தில் புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமை குறித்து பயிற்சிகள் தரப்பட வேண்டும்.

மனித உரிமை அமைப்புகள் இந்துக்கள் மீது நடைபெறும் வன்முறைகளை உலகளவில் எடுத்துச்செல்ல வேண்டும். இந்தியா, ஐநா போன்ற அமைப்புகள் வங்கதேச அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்து, சிறுபான்மையினர் உரிமைகளை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் இவை யாவும் நீண்டகால அடிப்படையில் நிகழ வேண்டியவை. அதற்கு முதலில் பதற்றமற்ற சூழல் உருவாகவேண்டும். 

தீர்வுக்கான அடிப்படைச் சிந்தனைகள்
    மத நல்லிணக்க அரசியலை முன்னிலைப்படுத்த,  மத அடிப்படையில் மோதலைத் தவிர்க்கவும்     ஒற்றுமையை உறுதிசெய்யவும் அரசியல் பங்காளிகள் செயல் திட்டங்கள் உருவாக்க     வேண்டும்.

மக்கள் இடையே ஒருமைப்பாடு உருவாக,   மக்கள் மத்தியில் உணர்வியல் வெறுப்பை   உருவாக்கும் சமூக வன்முறைகளை குறைப்பது முக்கியம். மனித உரிமை மீறல் குறித்து  சர்வதேச அளவில் தேவையான நடவடிக்கைகள் தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக, வங்க தேசத்தின் இந்துக்கள் அந்நிலத்தின் மைந்தர்கள். அவர்களும் அங்கே சகல உரிமைகளுடனும் வாழவேண்டியவர்கள் எனும் புரிதல் வேண்டும்.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula