இந்திய அரசியலிலும், பொருளாதாரத்திலும் முக்கியமான பாதிப்பை ஏற்படுத்திய பிரபலமான அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர் கலாநிதி மன்மோகன் சிங்.
பணிவும் மேன்மையான அறிவுச்செறிவும் நிறைந்த தலைமைப் பண்பும் கொண்ட தலைவராக உலகப் புகழ்பெற்றவர். இந்தியாவின் 13வது பிரதமராக 2004 முதல் 2014 வரை பணியாற்றிய காலத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் சிறப்பானவை எனக் கருதப்படுகிறது.
1932, செப்டம்பர் 26 ல் பிறந்து, பஞ்சாப் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் என்பவற்றில் பொருளாதார அறிவியலில் பட்ங்கள் பல பெற்றவர் மன்மோகன் சிங். உலகத் தரத்தில் பொருளாதார ஆய்வுகளில் திறமையான அவர் இந்திய பொருளாதாரத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினார்.
இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் ஆலோசகராக, ரிசர்வ் வங்கி ஆப் இந்தியாவின் ( 1982 –1985 ) ஆளுநராக பதவி வகித்த அவர், 1991–1996: நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார்.
அமைச்சராக இருந்த காலத்தில், இந்தியாவின் பொருளாதார திறந்தமயமாக்கல், தனியார்மயமாக்கல், மற்றும் உலகமயமாக்கல் பணிகளை தொடங்கிய அவர் 2004 – 2014 காலப்பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பிலான இந்தியாவின் பிரதமராக பதவிவகித்தார்.
மன்மோகன் சிங் அடக்கமான, சுயமாக செயல்படும் மற்றும் நேர்மையான அரசியல்வாதியாக அறியப்பட்டவர். அவர் தீர்மானங்களில் விடாமுயற்சியையும், அறிவார்ந்த அணுகுமுறையையும் வெளிப்படுத்தினார்.
மன்மோகன் சிங்கின் ஆட்சி வெற்றி மற்றும் சவால்களின் கலவையாக இருந்தது. அவரது ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியுடன் ஊழல் குற்றச்சாட்டுகளும் தலைவிரித்தாடின. இருப்பினும், இந்திய அரசியல் வரலாற்றில் அவர் மறக்கமுடியாத தலைவராக விளங்குகிறார்.
மன்மோகன் சிங்கின் குறிப்பிடத்தக்க சாதனைகள் இந்திய பொருளாதாரம், சமூக மேம்பாடு, மற்றும் சர்வதேச உறவுகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது ஆட்சியும் நிதி துறையிலும் ஆற்றிய சாதனைகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
1. பொருளாதார திறந்தமயமாக்கல் (1991):
இந்திய பொருளாதாரத்தை திறந்தமையாக்கிய முக்கிய நபர்.
அந்நிய நேரடி முதலீடுகளை (FDI) வரவேற்றார்.
வெளிநாட்டு வர்த்தக தடைகளை குறைத்தார், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை சீரமைத்தார்.
புதிய வரி கொள்கைகளை அறிமுகப்படுத்தினார், குறைந்த நிதி பற்றாக்குறியுடன் இந்தியாவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தினார்.
2. விகட்கார தடையை நீக்கல்:
இந்திய ரூபாயின் மதிப்பை சர்வதேச சந்தையில் நிலையானதாக மாற்றினார்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புகளை 1991 இல் சர்வகாலக் குறைந்த அளவில் இருந்து மீட்டார்.
3. பிரதமராக இருந்த காலகட்ட சாதனைகள் (2004–2014):
அணுசக்தி ஒப்பந்தம் (2008):
இந்தியா-அமெரிக்கா இடையே சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து, இந்திய அணுசக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA):
பணிக்கான உரிமையை முதல் முறையாக சட்டமாக்கினார்.
கிராமப்புற வேலை வாய்ப்புகளுக்கு நிலையான ஆதாரமாக மாறியது.
சுகாதாரத்தில் அதிக முதலீடு:
தேசிய சுகாதார திட்டங்களை (NRHM) அறிமுகப்படுத்தி, மூலோபாய சுகாதாரத்துறையை முன்னேற்றினார்.
திறந்த கல்விக் கொள்கை:
கல்வி உரிமைச் சட்டத்தை (RTE) கொண்டுவந்து, 6-14 வயதுடைய அனைவருக்கும் கட்டாயக் கல்வியை உறுதி செய்தார்.
உணவுப் பாதுகாப்பு சட்டம் (2013):
இந்தியாவின் வறுமைக் கோட்டிற்கீழ் உள்ள மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வழங்கும் திட்டம்.
உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் நிலை உயர்வுபெறத் தக்கவகையிலும், G20 உச்சிமாநாடுகளில் இந்தியாவின் சமூகத்தையும் பொருளாதார முன்னேற்றத்தையும் பிரதிபலிக்க உள்ளாட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டார். இந்தியாவில் புரையோடிப்போயிருக்கும் அரசியல் ஊழல்களினால் அவை மலினப்பட்டன. அதை எதிர்த்துப் போராட முடியாதவராகவும், ஒத்து ஒடுபராகவுமே இந்தியாவில் இருந்தார். இதனால் பொம்மைப் பிரதமர் எனும் விமர்சனத்துக்கும் உள்ளானார். ஆனால் உலகளாவிய ரீதியில், மன்மோகன் சிங் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் முக்கிய நாயகனாகவும் சமூக மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தவராகவும் மதிக்கப்படுகின்றார். அன்னாருக்கு அஞ்சலிகள் !