மக்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என மீண்டும் ஒரு புதுக்குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது. இந்தக் குரலின் மீது நம்பிக்கை கொள்வதா வேண்டாமா? எனும் சந்தேகத்துடனேயே இதனை பார்க்க வேண்டிய கட்டாயத்தை கடந்தகால ஆட்சிகளின் அரசியல் மக்களுக்குத் தந்திருக்கிறது.
போருக்குப் பின்னர் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் பலவற்றுடன், அரசாங்கத்தின் புதிய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் சமர்பித்துப் பேசியிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் குரல் மீதான நம்பிக்கையை மக்கள் வைப்பதற்கு அரசின் பாரபட்சமற்ற செயற்திட்டங்களே உதவும். ஆனால் அது இலகுவான பாதையல்ல என்பது எத்துனை உண்மையானதோ சாத்தியமானது என்பதும் உண்மையானதே. இலங்கையில் காலம் புதிய வரலாற்றை எழுதுகின்றதா அல்லது பழைய பல்லவியை திரும்பவும் பாட வைக்கின்றதா என்பதைக் காண இலங்கையர்கள் மட்டுமல்ல உலகமே காத்திருக்கிறது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயகாவின் 2025 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு மசோதா முதல் பட்ஜெட்
முழு உரையையும் பதிவிறக்க