மே28 ம் திகதியான இன்று முக்கியமாக அனுசரிசரிக்கப்பட்டுவரும் நாள் மாதவிடாய் சுகாதார நாள் 2021.
28 என்பது சராசரி மாதவிடாய் சுழற்சிக்கான நாட்களின் எண்ணிக்கை. 5 என்பது ஆண்டின் ஐந்தாவது மாதம், மே - அத்தோடு ஒவ்வொரு மாதமும் சராசரியாக மாதவிடாய் இரத்தப்போக்கு நாட்கள் 5 ஆகும். ஆக மே மாதம் 28ஆம் திகதி தேர்ந்தெடுக்கபட்டது.
உலகில் மாதவிடாய் வெளியேற்றும் பெண்களின் எண்ணிக்கை 1.8 பில்லியன். இதில் 2.3 பில்லியன் - உலகில் அடிப்படை சுகாதார வசதி இல்லாதவர்களின் எண்ணிக்கையாக கணிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் மாதவிடாய் இன்றளவில் பெண்களுக்கான மாதம்தோறும் வரும் ஒரு நோயாகவே பலராலும் பார்க்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாக பேசுவதில் பெறும் தயக்கம் நிலவுகிறது. ஆனால் அவற்றையேல்லாம் தகர்த்து எறிந்து ஆண்களாலும் பெண்களாலும் சாதரணமாக கருதி அணுகவேண்டிய ஒன்று எனும் விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தினம் உருவாக்கப்பட்டது;
இதேவேளை பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்நாள் உலக அளவில் கடைப்பிடிப்பதன் நோக்கமாகும்.
இதன் தொடர்பாக கொண்டுவரப்பட்ட விடயங்கள் :
*உலகில் பல்வேறு நாடுகளில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார பொருட்களைப் பயன்படுத்தல்; அவர்களுக்குத் தேவையானபோது அவற்றை மாற்றுவதற்குத் தனியிட வசதி.
*குறிப்பிட்ட நாட்களில் உடலையும் கைகளையும் தூய்மைபடுத்துவதற்காக தேவைப்படும் தண்ணீர்.
*பயன்படுத்தப்பட்ட சுகாதார அணிவிடைகளை அப்புறப்படுத்துவதற்கான வசதி.
ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி முறையான மாதவிடாய் சுகாதார மேலாண்மை (menstrual hygiene management – MHM) என்பதும் உருவாக்கப்பட்டது.
உலகில் பல்வேறு நாடுகளில் பெண்கள் மாதவிடாய் சுகாதார அணிவிடைகள் கிடைக்கப்பெற முடியாத வறிய நிலையில் உள்ளனர். மேலும் சில வறிய நாடுகளில் பள்ளிக்கழிப்பறைகள் வசதிகள் குறைவினால் மாதவிடாய் காலங்களில் பள்ளிக்கு செல்வதை தவிர்ப்பதினால் அவர்களின் கல்வி முன்னேற்றங்கள் பெரும் பாதிப்படைகிறது.
இதைத்தவிர மாதவிடாய் காலத்தில் மோசமான சுகாதார மேலாண்மையால் பெண்கள் இனப்பெருக்க பாதை கிருமித்தொற்றுக்கு ஆளாவதுடன் அவை எதிர்காலத்தில் பலவகை ஊனங்கள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
இன்னும் சில நாடுகளில் சுகாதார அணிவிடை பொருட்களின் விலை, கிடைக்கும் தன்மை, சமூக வரன்முறைகள் போன்ற காரணிகள் பெண்களால் மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை பாதிப்படைகிறது.

இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் இருந்தாலும் மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை குறித்த இத்தினம் பற்றி மக்களிடையே கொண்டுசேர்த்து முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்பாக menstrual hygiene day.org எனும் அமைப்பு தனது இணைத்தளத்தில் முற்று முழுதாக மாதவிடாய் சுகாதார நாளுக்காக பல்வேறுத்திட்ட விழிப்புணர்வு பிராச்சாரங்களை முன்னேடுத்துவருகிறது. அதனிடையே சேகரிக்கப்படும் தொண்டு நலச்சேவையையும் செயல்படுத்திவருகிறது.

அவர்களின் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பிராச்சரங்களை எம்மையும் இணைந்துகொள்ள அழைப்பதுடன் கோவிட் கால முடக்கத்தில் இருந்த இடத்திலிருந்தே இப்பிராச்சரங்களை எவ்வாறு முன்னேடுப்பது போன்ற வழிமுறைகளையும் தந்துள்ளனர்.
இச்செயற்பாட்டின் ஒரு பகுதியாக கையில் 28 மணிகள் கோர்த்த கைச்சங்கிலி அணிவதை கரும்பொருளாக வகுத்துள்ளனர். நாமே நமது கைகளால் செய்து மாட்டிக்கொள்ளும் வழிமுறையையும் தந்திருப்பது குறிப்பிடதக்கது.
சமூக வளைத்தளங்களிலும் #MHDay2021 #ItsTimeForAction எனும் ஹாஸ்டக்குகளுடன் பகிர்வதன் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
இவ் அமைப்பின் இந்திய பேஸ்புக் பக்கம் : MHDayIndia
இணைப்பு : https://menstrualhygieneday.org/
இதைத்தவிர water for womenfund.org எனும் மற்றுமொரு அமைப்பும் இத்தின சிறப்பு பிராச்சரங்களை செய்து வருகிறது. இணைப்பு : waterforwomenfund
மாதவிடாய் காலக் களங்கத்தை உடைத்தெறியும் குரல் நம்மிடமே உள்ளது. ஆண்கள் பெண்கள் என அனைவராலும் ஒற்றுமையாக அக்குரல் உயர்த்தப்படுமெயானால் பெண்கள் சுகாதார மேலாண்மை மேம்படும்.
-4தமிழ்மீடியாவிற்காக : ஹரினி
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    