free website hit counter

புதிய தொடக்கம்...!

Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். பலமான எதிர்பார்ப்புக்கு உள்ளான இந்த உரையில் அவர் பல்வேறு புதிய நடவடிக்கைகள் குறித்து அறியத் தந்து, அதற்கான மக்கள் ஆதரவினைக் கோரவும் கூடும்.

அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் ஏற்படுத்திய முதல் மாற்றம், இலங்கையின் பிரதமராக பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்ததும், அப்பதவிக்கு,  தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய அவர்களை நேற்றைய தினம் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். 

இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரான ஹரிணி அமரசூரிய, அவருக்கு முன் பதவி வகித்த, இரண்டு பெண் பிரதமர்களைப் போல் குடும்ப அரசியல் பின்னணி ஏதும் இன்றி வந்தவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் பட்டமும், ஆஸ்திரேலியாவின் சிட்னி மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானுடவியல் மற்றும் மேம்பாட்டுப் படிப்புகளில் முதுகலைப் பட்டமும்,  எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக் கழகங்களில் சமூக மானுடவியல், சர்வதேசச் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் முனைவர் பட்டமும் பெற்ற ஒரு சிறந்த கல்வியாளர். சிறந்த சமூக ஆர்வலர். இலங்கை எல்லாக் கலாச்சாரங்களையும் மதிக்கின்ற இன, மத பேதமற்ற ஒரு நாடாக வரவேண்டும் என்பதிலும், பெண்களின்களின் உழைப்பை  மதிக்கும் சமுதாயமாக, இலங்கை வர வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பவர்.

தூரநோக்குடன் செயல்படும் சிந்தனை, ஆங்கில மொழிப்புலமை, ஏற்றத்தாழ்வின்றி எல்லா தரப்பினரோடும் இணைந்து செயல்படும் பண்பு, அணியாகச் செயல்படும்போது எல்லோருக்கும் சமமான பங்களிப்பை வழங்கும் ஜனநாயக ரீதியான தலைமைத்துவத்தை விரும்புவர். 

ஆரம்பத்தில் , வெளியே இருந்து  தேமச கட்சியைப் பலமாக விமரிசித்து வந்தவரை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கியதுடன் அவரையே பிரதமராக்கி இருப்பது வரவேற்கத் தக்க நல்லதொரு மாற்றத்தின் துவக்கம் எனக் கொள்ளலாம். மாற்றங்கள் ஒரு போதும் ஒரு நாளில் நிகழ்ந்துவிடுவன அல்ல. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula