free website hit counter

இத்தாலியின் புதிய மீட்பர் ஆவாரா 'சூப்பர் மரியோ' ?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இத்தாலியின் புதிய பிரதமராக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றிருக்கும் 'சூப்பர் மரியோ' , இத்தாலியின் வளர்ச்சியை வென்றெடுப்பாரா ?

கொரோனா எனும் கோவிட் -19 வைரஸ் பெரும் தொற்றால், அதி கூடிய உயிழப்புக்களையும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியையும், அரசியற் குழப்பங்களையும், அடுத்தடுத்துச் சந்தித்திருக்கும் இத்தாலியின் புதிய பிரதமர் மரியோ ட்ராகி, 18.02.2021 வியாழக்கிழமை இரவு தனது அரசாங்கத்திற்கான நாடாளுமன்ற ஒப்புதலை, அங்கீகாரத்தை பெற்றார்.

இத்தாலியின் கீழ் சபை, பிரதிநிதிகள் சபை, இரண்டின் பிரதிநிதிகளும், முன்னாள் ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரையும், அவரது தொழில்நுட்ப அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் அமைச்சரவைக் குழுவையும் ஆதரித்துள்ளது. அவரது புதிய அரசுக்கு ஆதரவாக 535 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளையும் பெற்றார். ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் புதிய நிர்வாகியின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றன.

ஒரு நாள் முன்னதாக புதன்கிழமை செனட்டின், மேல் சபையில் நடந்த முதல் நம்பிக்கை வாக்கெடுப்பில் 262-40 என்ற வித்தியாசத்தில் எளிதாக வென்றார். இத்தாலியின் அன்மைக்கால அரசியற் குழப்பங்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருந்தாலும், கொரோனா வைரஸ் பெருந் தொற்றுநோயால் ஏறக்குறைய 100,000 மக்கள் இறந்ததும், அதனைத் தொடர்ந்த நாடாளவிய பூட்டுதலும், கடந்த ஆண்டு 8.9 சதவிகிதம் சரித்திருக்கிறது இத்தாலியின் பொருளாதாரத்தை. இத்தாலியின் வர்த்தகநகரும், ஐரோப்பிய நாகரீகத்தின் முக்கிய தளமுமாகிய மிலானோ நகரின் வர்தகக் காட்சி அரங்குகள் பல மூடப்பட்டு வருகின்ற ஒரு மோசமான நிலையில், இத்தாலியின் புதிய தலைவராக மரியோ ட்ராகி பொறுப்பேற்கின்றார்.

73 வயதுடைய மாரியோ ட்ராகி ஒரு பொருளாதார நிபுணர். ஐரோப்பிய மத்திய வங்கியின் முன்னாள் தலைவர். யூரோ எனும் நாணயப் புழக்கத்தினை பெருஞ் சவால்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தியதனால் " சூப்பர் மாரியோ " எனப் புகழப்பெற்றவர். அவரது " சூப்பர் மாரியோ" திறமையால் இத்தாலியை மீட்டெடுப்பாரா..?

விரிவான பார்வையினைக் கானொலியில் காணுங்கள்.....

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula