இஸ்ரேலியர்கள் எதிர்பாராத நேரத்தில், ஹமாஸ் படையினர் தொடங்கிய தீவிரமான தாக்குதலைத் தொடர்ந்து மூண்ட யத்தம் பெரும் ரதத்தக் களறியாகும் அபாயத்தை எட்டிக் கொண்டிருபதாகத் தெரிய வருகிறது.
இஸ்ரேலுக்குள், ஹமாஸ் படையினர் மேற்கொண்ட திடீர்த்தாக்குதல் தொடங்கப்ப்ட்ட முதல் நாளில், முழு உலகமே சற்று ஆச்சரியத்துன்தான் பார்த்தது. உலகின் எந்தப் பகுதியிலும் வேவு பார்ப்பதில் சிறந்தவர்கள் எனக் கருதப்பட்ட இஸ்ரேலுக்குள் இது எப்படிச் சாத்தியமாயிற்று என்பதே அந்த ஆச்சரியத்தின் அடிப்படை. இது ஒருவகையில் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பலமான உளவுத்துறைத் தோல்விதான். அதன் சீற்றம் அன்றைய நாளில் இஸ்ரேலிய அதிபர் நெத்தன்யாஹு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் வெளிப்பட்டது. நாம் யுத்தத்தில் இருக்கின்றோம் என மக்களை எச்சரித்த அவர் ஹமாஸின் தாக்குதலுக்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வரும் என்ற எதிர்க்குரலில் அளவிட முடியாத கோபம் வெளிப்பட்டிருந்தது. அது செயலான மூன்றாவது நாள் மோதலில், பாலஸ்தீனிய நிலப்பகுதி மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
தமக்கு விழுந்த அடியின் சீற்றத்தில் எழுந்த இஸ்ரேல் பெரும் யுத்தத்திற்குத் தயாராகத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் கட்டாய இராணுவ சேவைக்கான அணிதிரட்டலில் பல தசாப்தங்களாக காணப்படாத எண்ணிக்கையிலானோர் இணைத்துக் னெகாள்ளப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் 300,000 பேர்கள் இதற்கான பதிவுகளைச் செய்துள்ளனர். உணவு மற்றும் பானங்களை சேமித்து வைக்க இஸ்ரெலிய இராணுவத்தினர் மக்ககளுக் பரிந்துரை செய்து வருவதும், மேலதிக இராணு ஆட்சேர்ப்பும், இந்த யுத்தம் நீண்டு செல்லும் அச்சத்தைத் தோற்றுவிக்கின்றன.
இத்தாக்குதலில் இதுவரை இருதரப்பிலும் 1500 பேர்கள் பலியாகியுள்ளதாகவும், பலரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. பயணக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும், பெண்கள் குழந்தைகளை போர் சூழலில் இருந்து வெளியேற்றுவதற்கம் பல தரப்புக்களால் எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை. காணமற் போனவர்கள், பிணைக்கைதிகள் யாவரும் இறந்தவர்களாகவே கருதப்படுவார்கள் என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது இது விடயத்தில் இஸ்ரேலின் இறுக்கமான முடிவினைக் காட்டுகின்றது. ஆத்திரமூட்டப்பட்டுள்ள இருதரப்பும் கைதானவர்கள் பலரையும், பழிவாங்கும் வகையில் தொடரலாம் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பொது மக்கள் பாதுகாப்பின் கவனத்துடனேயே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேலிய தரப்பில் தெரிவிக்கபட்டு வருகின்றபோதிலும், இன்று அதிகாலை இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் செய்தி சேகரிக்கும் பணியிலிருந்த பத்திரிகையாளர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை ஆறு பத்திரிக்கையாளர்கள் இவ்வாறு இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் இருவரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே போன்று ஹமாஸ் படையினரால் கைது செய்யப்படுவோர் பலமாகத் தாக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவது போன்ற காட்சிகளும், வெளிவந்த வண்ணமுள்ளன. இவை அனைத்தும் இரு தரப்பும் மிகுந்த ஆத்திரமுற்றுள்ள நிலையில் உள்ளதைக் காட்டுகின்றது.
இஸ்ரேலிய குண்டுவீச்சினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து தப்பிக்க எகிப்திற்குள் நுழையும் முயற்சியில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தெற்கு காசா பகுதியில், ரஃபா மற்றும் கான் யூன்ஸ் நகரங்களில் ஒன்று கூடியுள்ளனர். ஆனால் - ரஃபா போக்குவரத்துப் பாதை தற்போதைக்கு மூடப்பட்டுள்ளது. அது எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது தெரியவில்லை.
இது இவ்வாறிருக்க ஹமாஸ் தரப்புக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் சிலவும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவுடன் மேற்குலக நாடுகள் பலவும் குரல் கொடுத்துள்ளன. இந்தியா தனது இஸ்ரேலுக்கான தனது ஆதரவினை வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஆனால் மத்திய கிழக்குப் பிரதேசத்தில் அமெரிக்கப் போர்க்கபல் இஸ்ரேலுக்கு ஆதரவாக நுழைந்த்திருப்பது, இந்த யுத்தத்தில் மூன்றாம் தரப்புக்களும் இணையும் அபாயத்தைத் தோற்றுவித்துள்ளதாக எச்சரித்துள்ளது. யுத்தம் ஒரு மோசமான விளைவினைப் பொது மக்களுக்குத் தரக் கூடியது என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்த போதும், அதிகாரவெறி அமைதியைக் குலைத்து, குண்டுகளைப் பொழிகின்றன.