காஸாவில் 46 நாட்களாக நடந்து வரும் உக்கிரமான யுத்தம், 4-5 நாள் நிறுத்தி வைப்பதற்கான உடன்பாடு இரு தரப்பிலும் எட்டப்பட்டுள்ளது.
இந்த யுத்த நிறுத்த காலத்தில், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கைதிகள் பரிமாற்றமும் நடைபெறவுள்ளதாகத் தெரிய வருகிறது. இதன்படி இஸ்ரேலியச் சிறைகளிலுள்ள 150 பாலஸ்தீனிய கைதிகளுக்குப் பதிலாக ஹமாஸ் சிறைப்பிடித்துள்ள 50 பணயக்கைதிகள் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார், எகிப்து, அமெரிக்கா, ஆகிய அரசுகளின் நீண்ட் கூட்டு முயற்சியில் இந்தப் போர் நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது. சுமார் 200 பணயக்கைதிகள் ஹமாஸ் கைகளில் இருப்பார்கள் என்பதை வலியுறுத்தி, அவர்கள் ஒவ்வொருவரையும் வீட்டிற்கு அழைத்து வருவது இஸ்ரேலிய அரசுக்கு உச்சபட்சக் கடமையாகும் என்பதனால், "வேதனையானது மற்றும் கடினமானது" என்று இஸ்ரேல் தரப்பில் வர்ணிக்கப்படும், இந்தப் போர்நிறுத்தத்திற்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"இது ஒரு தார்மீக மற்றும் நெறிமுறைக் கடமையாகும், இது சிறைப்பிடிக்கப்பட்டவர்களின் சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் யூத மற்றும் இஸ்ரேலிய மதிப்பை சரியாக வெளிப்படுத்துகிறது, இது அனைத்து பணயக்கைதிகளையும் வீட்டிற்கு கொண்டு வருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முதல் படியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இஸ்ரேல், IDF மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைகளும் இந்த இலக்கை அடைய எல்லா வழிகளிலும் தொடர்ந்து செயல்படும், அத்துடன் இஸ்ரேல் குடிமக்களுக்கு முழுமையான பாதுகாப்பை மீட்டெடுக்கும்." என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போர் இடைநிறுத்தத்தின் தொடக்க நேரம் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும், இது நான்கு நாட்கள் நீடிக்கும் எனவும், தேவைப்படின் அதனை மேலும் நீட்டிப்பதற்கும் முடியும் என கத்தார் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தால் இன்று காலை வெளியிடப்பட்ட குறிப்பில், எகிப்து, அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகியவற்றின் மத்தியஸ்தம் மூலம் ஏற்பட்டுள்ளது இந்த "மனிதாபிமான இடைநிறுத்தம்" .இதன்படி, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிப்பதற்கு ஈடாக தற்போது காசா பகுதியில் உள்ள 50 சிவிலியன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிணைக் கைதிகளை விடுவிக்க வழிவகுக்கிறது. ஒப்பந்தத்தை செயல்படுத்தும் அடுத்த கட்டங்களில் இந்தப் பரிமாற்றம் தொகை அதிகரிக்கப்படும் எனவும், இந்தப் போர்நிறுத்தம் மனிதாபிமான தேவைகளுக்காக எரிபொருள் உட்பட அதிக எண்ணிக்கையிலான மனிதாபிமான உதவிகளை நுழைய அனுமதிக்கும் என்றும் அக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா பகுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தின் “போர் தொடரும்” என்பதை, "இஸ்ரேலிய இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் கடத்தப்பட்ட அனைவரையும் திருப்பி அனுப்பும் போரைத் தொடரும், ஹமாஸை ஒழித்து, காசாவிலிருந்து இஸ்ரேல் அரசுக்கு மேலும் அச்சுறுத்தல்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும்" ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த "மனிதாபிமான போர்நிறுத்த" ஒப்பந்தத்தை ஹமாஸ் தரப்பும் வரவேற்றுள்ளது. "இந்த ஒப்பந்தத்தின் விதிகள் எதிர்ப்பு மற்றும் உறுதிப்பாட்டின் பார்வைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன, இது நமது மக்களுக்கு சேவை செய்வதையும், ஆக்கிரமிப்புக்கு முகங்கொடுக்கும் அவர்களின் உறுதியை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று இ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் " எங்கள் வெற்றிகரமான பட்டாலியன்கள் எச்சரிக்கையாக இருக்கும் என்பதையும் எங்கள் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம் என்பதனையும் உறுதிப்படுத்துகிறோம்" என்று ஹமாஸ் தரப்பும் எச்சரித்துள்ளது.