இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய ஜனாதிபதி பதவியேற்பு நாளை நடைபெறவுள்ளது.
இன்று பாராளுமன்றத்துள் நடந்த தேர்தலில் 134 வாக்குகள் பெற்று, 52 அதிகப்படியான வாக்குகளால் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார், அல்லது தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இது எப்படி ?
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ரணிலின் வெற்றியானது, மக்கள் ஆணையை இழந்துவிட்ட பொதுஜன பெரமுனவின் பிடியில் இன்னமும் பாராளுமன்றம் உள்ளதென்பதை நிரூபித்திருக்கிறதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அனுரகுமார திசாநாயக்க " டளஸ் அழகப்பெருமவுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்தவர்களின் எண்ணிக்கை 113க்கும் அதிகமாகும். அவ்வாறிருக்கு இந்த வெற்றி எப்படி சாத்தியமானது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ " நாம் டலஸை போட்டியிடச் செய்து, நாமும் வாக்களித்தோம் ஆனால் தோல்வியடைந்துவிட்டார். அதிக வாக்குகள் கிடைத்தமையால் ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற்று விட்டார். " இது மக்கள் ஆணை இல்லை என பலரும் கூறி வருகின்ற போதிலும், எம்மை பொறுத்தவரை இதுதான் மக்கள் ஆணை எனவும், எனவே ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டங்கள் போதுமென்று தான் நினைப்பதால் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதனை புரிந்துகொண்டு போராட்டங்களை கைவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது புதிய மொந்தையில் பழைய கள் என்பது எல்லோர்க்கும் தெரியும். ஆனால் வேறு வழி என்பதுதான் தெரியவில்லை...
இலங்கையின் அன்மைக்கால அரசியல் நகர்வுகள் குறித்து தோன்றும் சில கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் இலங்கையின் சமகால அரசியலுக்கானவை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய மக்கள் போராட்டங்கள் கண்டுதான் பதவி விலகினாரா..?
மக்கள் போராட்டங்கள் கண்டு அவர் பயந்தாரா ?
பாதுகாப்பான சூழல் ஒன்றுக்குப் போகும் வரை அவர் பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறிவிக்காதது மக்கள் போராட்டங்கள் மீ{தான பயத்தினால்தானா ?
இலங்கை அரசியலில், பிராந்திய அரசியல் ஆதிக்க சூட்சுமம் புரியாத தலைவர் ஒருவர் அல்ல.....
எல்லாம் சுபம்.... பாவம் மக்கள்.!