பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சர்வதேச Kick boxing தெரிவு செய்யப்பட்டுள்ள முல்லைத்தீவை சேர்ந்த ஒரே ஒரு தமிழ் தங்கைக்கு கை கொடுக்க விரும்பும் உறவுகள் அவசரமாக உதவிடுங்கள்.
தந்தையை இழந்த அந்த தங்கை 13 ம்திகதி பாகிஸ்தான் பயணிக்க வேண்டும் 3 லட்சம் எவ்வளவோ சிரம பட்டு அவர் கட்டிய நிலையில் இன்னும் 90000 (தொன்னுராயிரம்) தேவைபடுகிறது. சிறு துளி பெரு வெள்ளம். உதவிடும் உறவுகளின் கவனத்திற்கு என, ஜனவரி மாதம் 10ந் திகதி வவுனியாவிலுள்ள தமிழ்விருட்சம் அமைப்பின் நிறுவனர் செல்வராஜா சந்திரகுமார் கண்ணன், தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வேண்டுகோளை விடுக்கின்றார்.
இதனை ஏற்று, வவுனியா 93& 96 மகாவித்தியர்கள் நற்பணிமன்றம், 65, 000 (அறுபத்தையாயிரம்) ரூபாய்களை வழங்க, மேலும் சில நண்பர்களின் உதவியும் பெற்று நம்பிக்கையுடன் பாகிஸ்தான் பயணித்த அந்தத் தமிழ்நங்கை இந்துகாதேவி.
பாகிஸ்தானில் இடம்பெற்ற 25 வயதுக்கு உட்டபட்ட பிரிவில் 50 – 50 கிலோ கிராம் எடைப் போட்டியில், இப்போது தங்கப்பதக்கத்தை வென்றிருக்கும் தமிழ் மங்கையாக இந்துகா தேவி. முல்லைத் தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில், தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இந்துகாதேவியின் சாதனை, இன்று எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
யுத்த வலிகளும், வடுக்களும், யுத்தத்தின் பின்னான வறுமையும், வாழ்க்கயைின் அழுத்தங்களும், பலரது திறமைகளையும் அழித்துவிடும் நிலையில், இந்துகாதேவியின் நம்பிக்கையும், அவரது தாயாரின் விடாமுயற்சியும், தரவேண்டியவர்களுக்கு தந்துதவேண்டும் எனும் தாராள குணமுடைய மாந்தர்களின் கொடையும், உரிய நேரத்தில் அதனை ஒருங்கமைத்த தமிழ்விருட்சம் கண்ணனின் முயற்சியும் இணைந்து இந்துகாதேவியினால் இலங்கைக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்துகாதேவி தன் இளவயதிலே அனுபவித்திருக்கக் கூடிய வலிகள், குத்துச் சண்டையொன்றிலே தாங்கிக் கொள்ள வேண்டிய வலிகளிலும் பெரிதாகவே இருந்திருக்கும். எல்லா வலிகளையும் வெற்றியின் வழியாக்கி கொண்ட இந்துகாதேவியை வாழ்த்தலாம் !