free website hit counter

தனது மக்கள் மன்றங்களை ஊத்தி மூடிய ரஜினி! பின்னனி என்ன ?

பார்வைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய கையோடு ஒரு வேலையை செய்து முடித்திருக்கிறார் ‘அண்ணாத்த’ படத்தில் கவனம் செலுத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

ஜூலை 12-ஆம் தேதியான இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சென்னை ராகவேந்திரா கல்யாண மண்டப்பத்தில் அழைத்துப் பேசினார் ரஜினி. ஆனால், இதில் பாதிக்கும் அதிகமான மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொள்ளவில்லை. ரஜினி நடத்தியுள்ள இன்றைய சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் சிறு சலசலப்பைஏற்படுத்தியது. தற்போது அரசியல் நுழைவுக்காக தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியதை கலைத்து, மீண்டும் ரசிகர் மன்றங்களாக மாற்றி அறிக்கை ஒன்றையும் இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் ரஜினி கூறியிருப்பதாவது; ‘ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என்னை வாழவைத்த தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை. நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.

கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால், ரஜினி மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப் பணிக்காக முன்பு போல் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாகச் செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு ரஜினி தனது அரசியல் நுழைவுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்து கதவுகளை இறுக முடிவிட்டார். இதற்கான பின்னனி என்ன என்பதற்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி முடித்தபின் பத்திரிகையாளர்களுடன் பேசிய ரஜினி தெரிவித்ததாவது. “ நான் அரசியலுக்கு எதிர்காலத்தில் வருவேன் என்ற சந்தேகம் மக்களிடம் இருப்பதாக அறிந்தேன். அதை மக்கள் மன்றங்களைக் கலைத்து அவர்களுக்கு தெளிவுபடுத்திவிட்டேன்’. என்னுடைய தரப்பில் அரசியலுக்கான கதவு சாத்தப்பட்டு முழுமையாக பூட்டப்பட்டுவிட்டது” என்றார்.

-4தமிழ் மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula