இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் (16.04.2023 ) நடைபெற்ற மான்செஸ்டர் மரத்தான் ஓட்டப் போட்டியில் சேலை அணிந்து ஓடிய இந்தியப் பெண்மணி பலரது கவனத்தையும் பாராட்டினையும் பெற்றுள்ளார்.
இந்த மராத்தான் ஒட்டப் போட்டியின் 42.2 கி.மீ தூரத்தையும் 4 மணி 50 நிமிடங்கள் முழுவதுமாக ஒடி முடித்த அந்தப்பெண் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா.
இவர் மான்செஸ்டரில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். ஆசிரியராகவும், தாயகவும் உள்ள அவர் உலகெங்கும் நடைபெறும் பல மராத்தான் ஒட்டங்களிலும் கலந்து வருகின்றார். 2023 மான்செஸ்டர் மரத்தான் ஓட்டப் போட்டியில் சுமார் 28000 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஆண்களில் இக்னாஸ் ப்ராசெவியஸ் ( Ignas Brasevicius 02:16:27 ) பெண்களில் நவோமி மிட்செல் (Naomi Mitchell 02:31:27 ) ஆகியோர் முதலாவது இடத்தினைப் பெற்றிருந்தார்கள். மாரதத்தான் ஒட்டப் பாதையின் 42.2 கி.மீ தூரத்தையும் முழுமையாக 1000 க்கும் மேற்பட்டவர்கள் ஓடி முடித்திருந்தார்கள். அவர்களின் மதுஸ்மிதா ஜெனா பலரது கவனத்தையும் ஈர்ந்தார். அதற்கான காரணம், அவர் அப்போட்டியில் இளஞ்சிகப்பு வண்ணத்தில் சாம்பல்புரி கைத்தறிச் சேலை அணிந்தவாறு பங்குகொண்டதாகும்.
ஊடகங்களின் கவனம் பெற்ற இந்தச் செய்தியறிந்து, ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக், மதுஸ்மிதாவை கானொளி உரையாடலில் அழைத்து, நேரடியாக வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கைத்தறிச் சேலைகளையும், அதன் உற்பத்தியாளர்களையும் , இந்தியக் கலாச்சாரத்தினைக் கவனம் பெறவைக்கும் ஒரு முயற்சியாகவும் இதனை மதுஸ்மிதா மேற்கொண்டதாக செவ்விகளில் தெரிவித்துள்ளார்.