'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொண்டு வந்து இங்கு சேர்ப்பீர்' என்றான் பாரதி. பிறநாட்டு நல்லறிஞர் கலைகள் யாவும் நம்மவர் அறிந்திடல் வேண்டும் என்பது தமிழின் மகாகவி பாரதியின் பெரு நோக்கு வரிகள்.
அதுபோலவே நம்மவர்கள் கலைகளும், செய்திகளும், உலகெங்கினும் சென்றிடல் வேண்டும் எனும் பெருவிருப்பு எமக்குண்டு. மேலும் புலம்பெயர் தேசங்களில் வாழும் நம் இளையவர்கள் பன் மொழிகள் கற்றுவரும் சந்ததியினர். இவர்களுக்கு நம் மொழி, கலாச்சாரத் தகவல்களை, அவர்களுக்குப் பரிச்சயமான சிந்தனை மொழிகளில் வழங்க வேண்டும் என்பதும் நோக்கமானது.
இந்த நோக்கங்களின் வழியிலேயே 16 ஆண்டுகளுக்கு முன்னதாக 4தமிழ்மீடியா இணையத்தளத்தை உருவாக்கும் போதே, அதனை பன்மொழித்தளமாக உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தது. அதற்கான முயற்சிகளை எடுத்திருந்த போதும் அது சாத்தியமாகவில்லை. பின்னரும் சிலதடவைகள் முயற்சித்த போதும், தொழில்நுட்பச் சிக்கல்களால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும் எங்கள் நோக்கம் மட்டும் மாறவில்லை. இப்போதுள்ள தொழில் நுட்ப வசதிகளின் உதவியோடு அந்த முயற்சியை மீண்டும் பரீட்சார்த்தமாக முக்கியமான பன்னிரு மொழிகளில் முயற்சித்துள்ளோம்.
இம்முறை இந்த முயற்சியில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தினை எட்டியுள்ளோம். இதிலுள்ள மொழிமாற்றுக் குறைபாடுகளை நாம் அறிந்துள்ள போதும், அதனைத் துல்லியமாகத் தெரியப்படுத்தக் கூடியவர்கள் வாசகர்களே.
தளத்தின் வலது புறத்தில் காணப்படும் மொழிமாற்றியில் உங்கள் மொழித் தெரிவினைச் செய்து வாசித்து, உங்கள் கருத்துக்களையும் அனுபவத்தையும், கருத்துக்களாகத் தெரிவியுங்கள். அதேபோல உங்களுக்குத் தெரிந்த சக மொழியாளர்களிடம் இத் தளத்தினை அறிமுகம் செய்து பகிர்ந்து உதவுங்கள்.
பன்மொழித் தளமாக உருவாக்குகையில், தனியே மொழிமாற்றுகை மட்டுமே பிரச்சனை அல்ல. அதையும் தாண்டி, பல்வேறு நாடுகளின் ஊடகங்களுக்கான சட்ட வரைபுகளும் எம்மை மட்டுப்படுத்தும். ஆகையால் அவை தொடர்பிலும் திருப்திகரமாகச் செயற்பட உங்கள் ஒவ்வொருவருடைய மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும்,
- என்றும் இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்
Super. goodluck
ලස්සන සිංහල. භාරදිගේ දේශනය නියපරිදි ලියා ඇත.
Good initiative! Expecting more contents.