free website hit counter

இணைந்திருங்கள்...!

நாம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ணக்கம் !

4தமிழ்மீடியாவின் புதிய தளவடிவமைப்பு மாற்றமும், நிறுவலுக்குமான தொழில்நுட்பப் பணிகள் எண்ணிய இலக்கினை வந்தடைந்திருக்கின்றன.

விளம்பரங்களின் குறுக்கீடில்லாத, வாசக அனுபவத்தை, கட்புலனுக்கு உறுத்தலில்லாமல் தரவேண்டும் எனும் விருப்போடும், தரமான விடயங்களுக்கும், வாசகர்களின் சிந்தனைக்களுக்கான அறிமுகத் தளமாகவும், எல்லாவித இலத்திரனியல் ஊடகத் தொழில்நுட்பச் சாத்தியங்களையும் ஒருங்கமைத்தும், உருவாக்கியுள்ள இந்தப் புதிய வடிவமைப்பின் பயன் யாவும் வாசகர்களுக்கானது.

மேலும் புதிய சில பகுதிகளைச் சேர்த்துள்ளோம். சிலபகுதிகளுக்கு சிறப்புக் கவனம் பெற வைத்துள்ளோம். இவையணைத்தும் இணையச் சமுத்திரத்தில் முக்குளித்து நாம் எடுத்து வரும் முத்துக்களாக இருக்கும் எனவும், உங்களுக்கு சிறப்பான வாசிப்பனுவத்தை தரும் எனவும் நம்புகின்றோம். இவை குறித்து வாசகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் வாய்ப்பும் ( சில சிறப்புப் பகுதிகள் தவிர்த்து) இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர மேலும் சில புதிய விடயங்களையும், அவற்றுக்கான அறிவிப்பினையும் விரைவில் தருவோம்.

இந்தப் புதிய தளவடிமைப்புக்காரணமாக கடந்த இரு வாரங்களாக, எமது தினசரி மின்னஞ்சல் செய்திகளும், வாராந்த மின்னஞ்சல் சேவையும் இடம்பெறவில்லை. இன்னும் ஒருசில தினங்களில் அவையும் வழமைபோல் இயங்கத் தொடங்கிவிடும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

அன்பானவர்களே !

http://www.4tamilmedia.com எனும் இணைய முவரியில், எங்கள் தளத்தின் முழுமையான புதிய வடிவமைப்பினைப் பார்த்தபின், தளம்பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கருத்துக்கள் பகுதியில் தெரிவியுங்கள்.

தளத்திற்கான விருப்பத்தினை உங்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் முதலான சமூகவலைத்தளங்களில்  பகிர்ந்து தொடரலாம்.

தினசரி மின்னஞ்சலில் முக்கிய செய்திகளைப் பெறவிரும்புவோரும் வாராந்திர சிறப்புச் செய்திகள் பெறவிரும்புவோரும் உங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை செல்லிடத் தொலைபேசியில் பெற விரும்புவோர், + 41 77 999 00 49 எனும் இலக்கத்திற்கு அழைப்பின்( missed call) மூலம் அல்லது குறுஞ்செய்தி (SMS)மூலம் எமது whatsapp குழுமத்தில் சேர்ந்துகொள்ளலாம்.

இவ்வாறான உங்கள் செயல்களின் மூலம், பரபரப்புக்கள் அற்ற உண்மையான, செய்திகளை தர விரும் எங்கள் அறம்சார் ஊடகப் பணியில் உங்கள் அனைவரது ஆதரவினையும் வழங்கி இணைந்திருக்க வேண்டுகின்றோம் !

- என்றும் மாறா இனிய அன்புடன்
மலைநாடான்
4தமிழ்மீடியா குழுமம்

No comments

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: