டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-12 சுற்று இன்றுடன் நிறைவு

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 12 சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்றன.
இதில் குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும்,
குரூப் 2 இல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

இந்நிலையில், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்று கடைசி போட்டியில் இந்தியா அணி சிம்பாப்வே அணியை வீழ்த்தியது.

முதலாவது அரையிறுதி போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி நியுஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டாவது அரையிறுதி போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்