வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட் தொற்று உறுதி

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வனிந்து ஹசரங்கவிற்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய தினம் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது t20 போட்டியில் வனிந்து பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. அவரது இடத்திற்கு பந்துவீச்சாளரான ஜெப்ரி வண்டர்சே இணைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்போட்டி இன்று பி.ப. 1.40 மணிக்கு அவுஸ்திரேலியாவின் கென்பரா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் வனிந்து ஹசரங்கவை றோயல் சலன்ஜர்ஸ் பங்களுரு அணி 10.75 கோடி இந்தியா ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்