இந்தியா - பாகிஸ்தான் விவகாரம் - அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் அமெரிக்கா

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க டிரம்ப் விரும்புவதாக, அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் தணிய வேண்டும் என அதிபர் டிரம்ப் விரும்புகிறார் என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின்
லீவிட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார் எனவும் கரோலின் லீவிட் கூறியுள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்