தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் அமல்: மீன் விலை அதிகரிக்க வாய்ப்பு
தமிழ்நாட்டில் 61 நாள் மீன்பிடி தடை காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 2 மாதங்களுக்கு கடலுக்கு செல்லாது. தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அமலில் இருக்கும்.