உலகின் உயரமான ரயில் பாதைப் பாலம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலகின் உயரமான ரயில் பாலம் எனும் பெருமைக்குரிய  செனாப் ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்டிருக்கும் 1,315 மீட்டர் நீளமான பாலம்  இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

செனாப் ஆற்றின் மேலே 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம்  கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையேயுள்ள ரயில் பயணத்தை 3 மணிநேரமாகக் குறைக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

பிரதமர் மோடி, காஷ்மீர் மாநிலத்தில் அபிவிருத்தித்திக்கென சுமார் ரூ.44 ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பத்ராவில் நடைபெற்ற இவ் விழாவில் மத்திய மந்திரி நிதின் ஜெய்ராம் கட்கரி, ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா, ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, துணை முதல்-மந்திரி சுரிந்தர்குமார் சவுத்ரி உட்பட மேலும் பலர் கலந்துகொண்டனர். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்