இனி அரசு விழா - நன்றி கூறும் இந்து முன்னணி!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு இந்து முன்னணியினர் நன்றி தெரிவித்தனர்.

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் தஞ்சையை மட்டும் இன்றி தென்கிழக்கு நாடுகளையும் ஆட்சி செய்தார். இந்தியாவின் மாபெரும் மன்னராக விளங்கிய ராஜேந்திர சோழன் தனது காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற கோயிலை கட்டினார் என்பதும், அந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது என்பதும் வரலாற்று உண்மையாகும். இதனால் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் ஆடி திருவாதிரை தினம் அன்று ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களால் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக ராஜேந்திர சோழனின் பிறந்த தினத்தை அரசு விழாவாகவும் மற்றும் அவருக்கு மணிமண்டபம் அமைத்து திருவுருவச்சிலை அமைக்க வேண்டியும் பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வந்தனர். தற்போது அதற்கான உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்