website analysis

கியூ.ஆர். குறியீட்டு முறைமை தொடர்பில் விளக்கம் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நடைமுறை ஏப்ரல் 10ஆம் திகதியுடன் இடை நிறுத்தப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.

முன்னதாக, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் QR குறியீடு எரிபொருள் விநியோக முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) வட்டாரங்களை மேற்கோள்காட்டி NewsFirst செய்தி வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த அறிக்கையை மறுத்துள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் கடவு QR முறையை இடைநிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தேசிய எரிபொருள் பாஸ் தரவு பகுப்பாய்வு செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சகம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து இந்த அமைப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் ட்விட்டர் செய்தியில் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைத் தணிப்பதற்காக கடந்த ஆண்டு (2022) தேசிய எரிபொருள் கடவு QR முறை அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்