website analysis

பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி ரத்து

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பூரண கொவிட் தடுப்பூசியை கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவிப்பு திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக, ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடை செய்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்ய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, முன்னர் வெளியிடப்பட்ட 2264/09 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் 101வது உத்தரவு, சுகாதார அமைச்சரினால் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்