சுவிற்சர்லாந்தில் கோவிட் அபாயம் இன்னமும் நீங்கவில்லை : சிடிஎஸ் தலைவர் ஏங்கல்பெர்கர்
"நாங்கள் இன்னும் ஆபத்தில் இருந்து மீளவில்லை," என்று சுகாதார இயக்குநர்கள் மாநாட்டின் (சிடிஎஸ்) தலைவர் லூகாஸ் ஏங்கல்பெர்கர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தளர்த்துவதற்கு முன் காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.